ஒரே நாளில் 2 பிணங்கள்.. ஆண் தூக்கில் தொங்கியும், பெண் எரிந்தும்.. குற்றாலம் அருகே பரபரப்பு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே நன்னகரம் என்ற பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண் பிணமும், ஐந்தருவி பகுதியில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டன.
நன்னகரம் பகுதியில் எரிந்த நிலையில் பெண் பிணம் கிடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் விரைந்து சென்றனர். நன்னகரம் தேவேந்திரகுல சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட நொண்டி மாடசாமி கோவில் அருகே மல்லாந்த நிலையில் ஒரு பெண் தீ வைத்து எரிந்த நிலையில் கிடந்தார். அங்கு கிடந்த மண்ணெண்ணை கேன் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்டவைகளை போலீஸார் கைப்பற்றினர்.

இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் கொலை செய்து கொண்டு வந்து போட்டு எரித்து சென்றார்களா என்பது தெரியவில்லை. உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு தென்காசி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக குற்றாலம் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்ற அவர்கள் அழுகிய நிலையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த உடலை கைப்பற்றினர்.

விசாரணையில், அவர் திருநெல்வேலி-சங்கரன் கோவில் சாலையில் உள்ள அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சங்கு என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் கடந்த 17ஆம் தேதி பாவூர்சத்திரம் அருகே சாலையில் விழுந்து காயமடைந்து பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
ஒரே நாளில் அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையிலும், காட்டுப்பகுதியில் ஆண் பிணமும் கண்டெடுக்கபட்டது குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications