Valentines Day Wishes Tamil: காதலர் தின வாழ்த்துக்கள் போட்டோ! மனைவிக்கு, கணவருக்கு அனுப்ப ரெடியா?
Valentines Day Wishes, Images, Quotes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். காலங்கள் மாறினாலும், காதல் உணர்வு மற்றும் அந்த நாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் எப்போதும் காதலர்களிடம் மாறவே மாறாது. அந்த வகையில் உங்கள் அன்பான காதலன் அல்லது காதலிக்கு அனுப்பக்கூடிய வாழ்த்துகளை நாம் பார்க்கலாம்.
பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நாளில், காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை வெளிப்படுத்த, பரிசுகளை வழங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தி மகிழ்விப்பார்கள். மேலும், காதலர் இல்லாதவர்கள் இந்த நாளில் தங்களுடைய உணர்வுகளை ஏற்கனவே பிடித்தவர்களுக்கு தெரிவித்து, காதலை பிரதிபலிப்பார்கள்.

ஒரு சிறந்த நாளின் தொடக்கம் அன்பான வாழ்த்துகளுடன் தான்! இந்த காதலர் தினத்தில், உங்கள் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ மனதை நிறைவான, அன்பு மிகுந்த கவிதைகளுடன் வாழ்த்துகளை தெரிவித்தால், அது அவர்களுக்கு மிகவும் சிறந்த பரிசாக இருக்கும்.
இங்கே, உங்கள் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ அனுப்பி அவர்களை மகிழ்ச்சியூட்டும் இனிமையான காதலர் தின வாழ்த்துக்கள் சில கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து, உங்கள் அன்பை அவர்களுக்கு பகிர்ந்துகொள்க!
காதலர் தின கவிதைகள்:
1. கன்னங்கள் சுருங்கலாம்.. தலைமுடி நரைக்கலாம்.. ஆனால் உன் மீதான அன்பு என்றும் அணு அளவும் குறையாது
2. நானோ உன்னுடன் இல்லை.. நீயோ என்னுடன் இல்லை.. ஆனால் நம் அன்பு என்றும் இணைபிரியாதது.! காதலுக்கு காதலர் தின வாழ்த்துகள்
3. இரண்டு நிமிடம் பேசினாலும் 24 மணி நேரமும் உன் நினைவுகள் என்னை விட்டு விலகுவதே இல்லை.!
4. உன் கண் அசைவில் மயங்கிப் போனேன் நான்... மயக்கம் தெளியாமல் உன்னிடமே உன் நெருக்கத்தில் அடங்கிப் போகிறேன் நான்..
5. இடைவிடாது பேசும் உன் இதழ்கள் அழகென்றால் இடையிடையே பேசும் உன் விழிகள் பேரழகு இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் அழகியே!!
6. என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால் அங்கும் வந்துவிடுகிறாய் நானே உன் உலகமென்று இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் உயிரே..
7. உன் கண் அசைவில் மயங்கிப் போனேன் நான்... மயக்கம் தெளியாமல் உன்னிடமே உன் நெருக்கத்தில் அடங்கிப் போகிறேன் நான்..
8. நீ பார்த்த அந்த நொடி.. கரைந்தது காலம் மட்டுமில்லை.. எனது இதயமும் தான்! என்றென்றும் அன்புடன்
9. காரணமின்றி காதல் வருகிறதடி உன் மீது... ஏனோ உன்னைப் பிடிக்கிறது...
10. திருமணம் முடியும் வரை செய்வதல்ல காதல்... கண்மூடும் வரை செய்வதே காதல்...
11. என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்தே தினமும் எனக்கு காதலர் தினம்...
காதலர் தின வாழ்த்து 1:
எல்லோருக்கும் அழகை
வர்ணிக்க தானே
கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ
தேவைப்படுகிறாய்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள்
என் அன்பே!

காதலர் தின வாழ்த்து 2:
உறங்காத என் கண்களும்
உறங்கிப் போனதடி உன்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
அன்பான இனிய காதலர்
தின நல்வாழ்த்துக்கள்!!

காதலர் தின வாழ்த்து 3:
உன்னிதழ் மௌனமாக
பேசிட மயங்கித்தான்
போனது என் மனம்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலா!!

காதலர் தின வாழ்த்து 4:
உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால்..
ஆயுள் முழுதும் வாழ்வேன்
எனை மறந்து..
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள்
என் காதலே!

காதலர் தின வாழ்த்து 5:
கனவு கலைந்த பின்னும்
விழிகள் மூடிக்கிடக்கின்றேன்
உன் பிம்பம் கலைந்திட கூடாதென
காதலர் தின வாழ்த்துக்கள்

காதலர் தின வாழ்த்து 6:
நீ விட்டு சென்ற மிச்சத்திலும் தொட்டு
சென்ற வெக்கத்திலும் சிக்கி தவிக்கிறது
என் நாணம் இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே!!

காதலர் தின வாழ்த்து 7:
ஓரெழுத்து கவிதை நீ...
ஈரெழுத்து கவிதை நாம்...
மூன்றெழுத்து கவிதை காதல்...
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் அன்பே!

காதலர் தின வாழ்த்து 8:
நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை கேட்காத
நொடிகள் இல்லை கேட்கிறேன்
என் இதய துடிப்பில்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள்
என் இதயமே!

காதலர் தின வாழ்த்து 9:
திணறடிக்கும் உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய் உன் இதயத்தில்
காதலர் தின வாழ்த்துகள்

காதலர் தின வாழ்த்து 10:
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது
நம் காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்

-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications