ஏற்கனவே 2.. இதில் 3வதாக முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா!
பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் கைது செய்யப்பட்டார்
Recommended Video
வேலூர்: ஏற்கனவே 2 கணவன்கள்.. 3-வதாக முருகனுடன் தொடர்பில் இருக்கும் சத்யா, பெற்ற குழந்தையை யாருக்கும் தெரியாமல் விற்று.. அட்வான்ஸ் வாங்கி உள்ளார்.
வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர் புகாரின்பேரில் குழந்தையை மீட்டு வாணியம்பாடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர் புகாரின்பேரில் குழந்தையை மீட்டு வாணியம்பாடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இப்போது மூன்றாவதாக முருகன் என்பவருடன் தொடர்பில் இருக்கிறார். இவர்களுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சமயத்தில், முருகனுக்கு காசநோய் வந்துவிட்டது. அதனால், தர்மபுரி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து கொண்டு, திரும்பவும் ஊர் திரும்பினார்.
ஊருக்கு வந்து பார்த்தால், குழந்தையை காணோம். இதை பற்றி சத்யாவிடம் கேட்டதற்கு, சரியான பதில் இல்லை. மழுப்பலாகவே பேசி கொண்டிருந்ததால், முருகன் பொறுமையிழந்து, வாணியம்பாடி கிராமிய போலீசாரிடம் புகார் தந்தார்.

போலீசாரும் சத்யாவை அழைத்து விசாரித்தபோதுதான் குட்டு வெளிப்பட்டது. "என் பெரியம்மா கீதா மூலமா கவிதான்னு ஒரு புரோக்கர் எனக்கு அறிமுகம் ஆனாங்க. குழந்தையை பெங்களூரை சேர்ந்த ரஹமத் சகிலா தம்பதியினர் கேட்பதாக சொன்னாங்க. அதனால குழந்தையை 2 மாசத்துக்கு முன்னாடியே.. ஒரு லட்சத்துக்கு வித்துட்டேன். 65 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் வாங்கிட்டேன்" என்றார்.
இதையடுத்து போலீசார், பெங்களூர் ஜெயநகர் பகுதிக்கு விரைந்தனர். சத்யா சொன்ன தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். குழந்தையை விலைக்கு வாங்கி சென்ற ரஹமத் சகிலா தம்பதியினர், குழந்தையை விற்க உதவிய பெரியம்மா கீதா, புரோக்கர் கவிதா, முக்கியமாக குழந்தையின் தாய் சத்யாவை கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications