Vellore: வேலூரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்! தூக்கி வீசப்பட்ட 16 வயது சிறுமி பலி!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி மேம்பாலத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் டாடா ஏஸ் வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த லோகநாதன்(30) மற்றும் சிறுமி ஷாலு (16) ஆகிய இருவரும் வேலூர் லாங் பஜாரில் இருந்து டாடா ஏஸ் வாகனம் மூலம் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தனர். இதில் ஷாலு பின்புறம் அமர்ந்திருந்தார்.

vellore accident

பூட்டுத்தாக்கில் லோடை இறக்குவதற்காக வேலூர் சத்துவாச்சாரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டாடா ஏஸ் வாகனத்திற்கு முன்பு அரசு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

திடீரென அந்த அரசு வாகனம் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனத்தின் டிரைவர் லோகநாதனும் பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டது.

அதன் பின்னால் வேகமாக வந்த ஈச்சர் லாரி, கார் மீது மோதியது. உடனே கார், டாடா ஏஸ் வாகனம் மீது பலமாக மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஷாலு 16 வயது தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அப்போது கார், ஷாலு மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் காரில் பயணித்த இருவரும் அதில் இருந்த air bag ஓபன் ஆனதால் இருவரும் உயிர் தப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+