17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன்.. தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பலி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவன் ஒருவன் ஏமாற்றியதால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் 17 வயது பள்ளி மாணவி ஜங்களாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சேகரின் மகன் ராகுல்காந்தி (20).

இவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். காதலிப்பதாக கூறி ராகுல்காந்தி அடிக்கடி அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பு வகுப்புகாக பள்ளிக்கு சென்ற மாணவி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது தாயார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது கோவிந்தசாமி மகன் ஜீவா என்பவரது வீட்டில் மாணவியை ராகுல்காந்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு செல்லாமல் இருந்த மாணவியை தேடி அவரது தாயார் சென்றபோது ஊரே வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மாணவியை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ராகுல் காந்தி, ஜீவா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications