ஏற்கனவே 2 பேரு.. இதுல.. 3-வது கல்யாணத்துக்கு ரெடியான மஞ்சுளா.. ஜோடி மீது பாய்ந்த குண்டாஸ்!
குழந்தையை கொன்ற தாய் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைதானார்கள்
வேலூர்: ஏற்கனவே ரெண்டு... 3-வது கல்யாணத்துக்கு ரெடியான மஞ்சுளா, அதற்கு இடையூறாக உள்ள பச்சிளம் குழந்தையை கொன்று பாறாங்கல்லை வைத்து மூடினார்.. குழந்தையை கொன்ற மறுநாளே கல்யாணமும் செய்து கொண்டார்.. இதற்கு கள்ள காதலனும் உடந்தையாக இருந்தார்.. இப்போது இந்த ஜோடி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள மொட்டைமலை மீது முருகன் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் வேலைக்காக ஊழியர்கள் சில தினங்களுக்கு முன்பு மலை மீது ஏறி சென்றிருக்கிறார்கள். அப்போதுதான், பள்ளத்தில் 2 வயது பெண் குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.

போலீசாரும் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு, அந்த குழந்தை யாருடையது என்று விசாரித்தபோதுதான், ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த தங்கமணியின் குழந்தை என்று தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் மஞ்சுளாவிடம் விசாரணை ஆரம்பமானது.
மஞ்சுளாவுக்கு 23 வயசு.. தன் தாய்மாமனுடன் முதல் கல்யாணம் நடந்துள்ளது.. ஆனால், மதுரையை சேர்ந்த பாண்டியனை 2-வது கல்யாணம் செய்துள்ளார். இவர்களுக்கு பிறந்ததுதான் அந்த பெண் குழந்தை. ஆனால் பாண்டியனை பிரிந்துவந்துவிட்டார். கையில் குழந்தையுடன் அம்மா வீட்டில் தங்கி உள்ளார்.. இந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளாவுக்கு லவ் வந்துவிட்டது.
இவர்களது கல்யாணத்துக்கு குழந்தை இடைஞ்சலாக இருக்கும் என்று நினைத்து குழந்தையை மஞ்சுளாவும், 3-வதாக கல்யாணம் செய்ய இருந்த ராஜாமணியும் சேர்ந்து கொன்றனர். கடந்த 22ம் தேதி ராஜாமணியை கூடவே அழைத்து சென்று, கம்மவான்பேட்டை மலையில் இருந்து வீசி, அதன் சடலத்தின்மீது பாறாங்கல் போட்டும் மூடி வைத்துவிட்டு வந்தனர்.. கொன்ற மறுநாளே மஞ்சுளாவுக்கு 3-வது கல்யாணம் ஆகிஉள்ளது.
இந்த விவரங்களை எல்லாம் அறிந்த போலீசார் அந்த ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது, இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு எஸ்பி பிரேவஷ்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து ராஜாமணி மற்றும் மஞ்சுளாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதற்கான நகல் ஜெயிலில் தனித்தனியாக உள்ள 2 பேருக்கும் வழங்கப்பட்டது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications