23 வயசு மஞ்சுளா.. ஏற்கனவே ரெண்டு.. 3-வது புருஷனும் ரெடி.. குழந்தையால் தொந்தரவு.. கொன்ற கொடூரம்!
வேலூர் அருகே 2-வயது குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்
வேலூர்: ஏற்கனவே ரெண்டு.. இதில் மூன்றாவது கல்யாணத்துக்கு ரெடியானார் மஞ்சுளா.. ஆனால் தன்னுடைய 2 வயது குழந்தை தொந்தரவாக இருக்கவும் அந்த குழந்தையை கொலையே செய்துவிட்டார்!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள மொட்டைமலை மீது முருகன் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் வேலைக்காக ஊழியர்கள் மலை மீது ஏறி சென்றிருக்கிறார்கள்.
அப்போதுதான், பள்ளத்தில் 2 வயது குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.. அது ஒரு பெண் குழந்தை.. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.

சடலம்
போலீசாரும் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு, அந்த குழந்தை யாருடையது என்று விசாரித்தனர். அப்போதுதான் ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த தங்கமணியின் குழந்தை காணாமல் போனதாக தெரியவந்தது. குழந்தை காணவில்லை என்றதுமே குழந்தையின் தாய் மஞ்சுளாவிடம்தான் விசாரணை ஆரம்பமானது.

மஞ்சுளா
மஞ்சுளாவுக்கு 23 வயசு.. அப்போதுதான், மஞ்சுளாவுக்கு தன் தாய்மாமனுடன் முதல் கல்யாணம் நடந்துள்ளது.. பிறகு மதுரையை சேர்ந்த பாண்டியனை 2-வது கல்யாணம் செய்துள்ளார். இவர்களுக்கு பிறந்ததுதான் அந்த பெண் குழந்தை. ஆனால் பாண்டினை பிரிந்துவந்துவிட்டார்.

கொலை
கையில் குழந்தையுடன் அம்மா வீட்டில் தங்கி உள்ளார்.. இந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளாவுக்கு லவ் வந்துவிட்டது. இவர்களது கல்யாணத்துக்கு குழந்தை இடைஞ்சலாக இருக்கும் என்று நினைத்துதான் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.

கைது
கடந்த 22ம் தேதி ராஜாமணியை கூடவே அழைத்து சென்று, கம்மவான்பேட்டை மலையில் இருந்து வீசினர்.. குழந்தை இறந்துவிட்டதும், அதன் சடலத்தின்மீது பாறாங்கல் போட்டும் மூடி வைத்துள்ளனர்.. குழந்தையை கொன்ற மறுநாளே மஞ்சுளாவுக்கு 3-வது கல்யாணம் ஆகிஉள்ளது.. இப்போது இந்த புதுமண தம்பதி ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications