பக்கத்தில் வந்தார்.. கண்ணடித்தார்.. கட்டி பிடித்தார்.. அதுக்கப்பறம் விழுந்துச்சு பாருங்க.. ஆத்தாடி!

பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞர் தர்ம அடி வாங்கினார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பெண்ணை பார்த்து இளைஞர் ஒருவர் கண்ணடித்தார்.. சிக்னல் காட்டினார்.. பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.. கட்டிப்பிடித்தார்.. கடைசியில் செருப்படி வாங்கி கொண்டார்.. இந்த சம்பவம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.. தர்ம அடி வாங்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    40 year old woman attacked a person who misbehave in vellore gov hospital

    வேலூரில் பிரதானமான அரசு ஆஸ்பத்திரி அடுக்கம்பாறையில் உள்ளது... சாதாரண நாட்களிலேயே இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

     40 year old woman attacked a person who misbehave in vellore gov hospital

    தற்போது கொரோனா காலம் என்பதால் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது... ஆனால் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் பிரசவத்துக்கு இங்குதான் அனுமதிக்கப்படுவர்.

    மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு எதிரில் பிரசவத்திற்காகவும், மற்ற நோய்களை பார்ப்பதற்காகவும் வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம். அப்படித்தான் ஒரு பெண் காத்திருந்தார். அவருக்கு 40 வயது இருக்கும்.

    அந்த பெண்ணுக்கு எதிர் பெஞ்சில் இளைஞர் உட்கார்ந்திருந்தார்.. வந்ததில் இருந்தே அந்த பெண்ணை பார்த்து கொண்டே இருந்தார்.. திடீரென பெண்ணை பார்த்து கண்ணடித்தார்.. கையை உதறி சிக்னல் காட்டினார்.. இதையெல்லாம் கவனித்த அந்த பெண், ஆஸ்பத்திரி என்பதால் பொறுமையாக இருந்திருக்கிறார்.

    ஆனால், பெண் அமைதியாக இருப்பதை பார்த்து இளைஞர், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார்.. அந்த பெண்ணின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.. அப்போதும் அந்த பெண் அமைதியாக இருந்தார், ஆனால் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தார்.. இளைஞர் விடவில்லை, கிட்ட போய் அந்த பெண்ணை கட்டிப்பிடித்துவிட்டார்.

    அதற்கு மேலும் அந்த பெண்ணால் பொறுமையாக இருக்க முடியவில்லை.. காலில் உள்ள செருப்பை கழட்டி அந்த நபரை, தாக்க தொடங்கிவிட்டார்.. இளைஞரை வெளுப்பதை அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டிகள் ஓடிவந்து அந்த நபரை பிடித்து, போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.. விசாரணையில் இளைஞர் பெயர் பரசுராமன் என்பதும், கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையும் அவரிடம் நடக்கிறது.. ஆனால் இவர் செருப்பால் அடிவாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+