வேலூரில் வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உடல் நசுங்கி பலி!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தினசரி அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இங்கு ரயில்வே கேட் இருந்தும் கூட மக்கள், விதிகளை மீறி தண்டவாளத்தில் இறங்கி அதை கடப்பது வழக்கம்.

ரயில்வே நிர்வாகம் பல முறை எச்சரிக்கை தெரிவித்தும், மக்கள் தொடர்ந்து விதிகளை மீறி இப்படி தண்டவாளத்தை கடப்பது நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்று பேர் தண்டவாளத்தை கடக்கும் போது அவர்கள் மீது ரயில் ஏறியது.
வேலூர் நோக்கி சென்று கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பார்க்காமல், இந்த 3 பேறும் தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கிறார்கள். இதில் அவர்கள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியான மூன்று பேரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications