ஜோலார்பேட்டையில் பணமின்றி பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிய நபர்.. சிறையில் கம்பி எண்ணும் ஏமாந்த நபர்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு குடியானகுப்பத்தைச் சேர்ந்த சிலரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக கூறி மனைவி பெயரில் பவர் பட்டா செய்துள்ளார். இதில் குமார் எனப்வருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் குமார் முழு தொகையை செலுத்தாமல் ஏமாற்றி வந்தாராம்.. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் செய்த வேலையால் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு குடியானகுப்பத்தைச் சேர்ந்த சிலரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக கூறி மனைவி பெயரில் பவர் பட்டா செய்துள்ளார். ஆனால் நிலத்தை கொடுத்த சிலர் தங்களுக்கு அதற்குண்டான தொகை வேண்டும் என கேட்டு வந்த நிலையில் ரவிச்சந்திரன் அந்த நிலத்தை நாட்றம்பள்ளி அடுத்த மல்ல குண்டாவை சேர்ந்த குமார் (44) மின் டவர் அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் குமார் அந்த நிலத்திற்கான முழு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக ரவிச்சந்திரனுக்கும், குமாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று குடியானக்குப்பத்திற்கு தனது குடும்பத்துடன் குமார் வந்திருப்பதை அறிந்த ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று உனக்கு கிரயம் கொடுத்த சொத்தை மீண்டும் எனக்கு தரும்படி கூறியுள்ளார். ஆனால் குமாரோ நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் கூடுதல் பணம் தர வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் குமாரை தாக்கி அங்கிருந்து ஜோலார்பேட்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸிக்கு அழைத்து வந்தனர். இதனால் ஜோலார்பேட்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது குமாரின் தாயார் தங்களை காரில் கடத்தி வந்து கையெழுத்து வாங்க முற்படுகின்றனர் கதறி அழுதார்.
இதனால் சப் ரிஜிஸ்டர் இரு தரப்பினரின் சம்மதம் இல்லாமல் பத்திர பதிவு செய்ய முடியாது என நிராகரித்துவிட்டார். இதுகுறித்து குமார் தரப்பினர் எஸ் பி அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு விரைந்தனர்.பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அபோது குமார் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காரில் கடத்திச் சென்று கையெழுத்து வாங்க முற்பட்டதன் காரணமாகவும் தாக்கியதன் காரணமாகவும் ரவிச்சந்திரனின் மகனான விஷ்ணு மற்றும் சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிலத்தை பத்திர பதிவு செய்து கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த குமாரை காரில் கடத்திச் சென்று மீண்டும் பத்திர பதிவு செய்ய முற்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications