ஆதார் அட்டை வைத்துள்ளோருக்கு அறிவிப்பு.. ஆதார் புதிய பதிவிற்கு விலக்கு! வேலூரில் 7 மையங்களில் அதிரடி
வேலூர்: ஆதாரை பொறுத்தவரை, முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். தற்போதைய பிரச்சினையே பெயர், முகவரி மாற்றம் தான். பெயரை பொறுத்தவரை, இனிஷியலை முன்னால் போடுவதா, பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது, பெயர், இனிஷியலில் சிக்கல் வருகிறது. தலைப்பெழுத்துடன் பெயர் இல்லாவிட்டாலும் புதிய ஆதாரை பதியலாம் என்று நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகிவிட்டது.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று நிலைமை உள்ளது.. நம்முடைய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, ஆதார் கார்டுகள் தேவை. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு இருந்தால்தான் முடியும்.
முக்கியத்துவம் - அவசியம் என்ன
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதேசமயம் பிழையில்லாமல் கார்டுகள் இருப்பது அவசியம்.. பிழைகள் இருந்தாலும், அரசின் உதவியை பெற முடியாது என்பதால், சிறு பிழை என்றாலும் உடனே திருத்தி கொள்ள வேண்டும்.

அதேபோல, ஆதார் கார்டில் அப்பா பெயருக்குப் பதில் கணவர் பெயரை இணைக்க வேண்டுமானால், ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்கு முதலில் உங்கள் ஆதார் கார்டுடன் போன் நம்பர் லிங்க் செய்திருக்க வேண்டும். கணவர் பெயரை மாற்றச் சான்றிதழ் ஆகத் திருமண சான்றிதழ் என இவை இரண்டும் இருந்தாலே போதும்.. சில நிமிடத்திலேயே ஆதார் கார்டில் அப்டேட் செய்யலாம்.
முகவரி மாற்றம் - பெயர் திருத்தம்
அதேபோல, ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாகவோ அல்லது வேறு முகவரி இருந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், ஆதார் கார்டுகளை பயன்படுத்தி மோசடிகளும் அதிகரித்து வருவதால், ஆதார் அட்டையை அப்டேட் செய்வது அவசியமாகும்.. அதன்மூலம் ஆதார் கார்டு பாதுகாப்பாகவும் இருக்கும், மோசடிகளையும் தடுக்க முடியும்.
அதனால் தான், நாடு முழுவதும் ஆதார் சேவை மையங்கள் மூலமாக புதிய ஆதார் பதிவு, ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்முடைய தமிழ்நாட்டில் எல்காட் மற்றும் தாலுகாக்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன..
தலைப்பெழுத்து - முழுப்பெயர்
ஆதாரை பொறுத்தவரை, முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். தற்போதைய பிரச்சினையே பெயர், முகவரி மாற்றம் தான். பெயரை பொறுத்தவரை, இனிஷியலை முன்னால் போடுவதா, பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது, பெயர், இனிஷியலில் சிக்கல் வருகிறது.
தனித்துவ அடையாளம்
ஆனால், தமிழகத்தின் ஆதார் மையங்களில் புதிய ஆதார் பதிவு செய்யும்போது, பெற்றோர் ஆதார் அட்டையில் உள்ளது போல பிறப்பு சான்றிதழில் பெயர் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது பெயர் முழுபெயராகவோ அல்லது தலைப்பெழுத்துடன் மற்றும் முழுபெயர், தலைப்பெழுத்து முன்னதாக பின்னர் பெயரும், தலைப்பெழுத்து பின்னதாகவும் இருந்தால் எப்படி இருந்தாலும் புதிய ஆதார் பதிவு செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், வேலூர் மாவட்டத்தில் ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் நேற்று முதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலகம் உட்பட 7 மையங்கள், தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் ஆதார் மையங்கள் என அனைத்திலுமே இந்த நடைமுறை தொடரப்பட்டுள்ளது என்று ஆதார் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications