வானில் இருந்து கொட்டிய கட்டிகள்.. வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக ஆலங்கட்டி மழை.. மக்கள் உற்சாகம்!
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, வளத்தூர், கீழ்பட்டி, செம்பேடு உள்ளிட்ட இடங்களில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் தொடக்கம் முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 100 டிகிரி ஃபார்ன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. ஊட்டியே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை சூடாகியுள்ளது.

வேலூரில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி முதல்110 டிகிரி வரை வெயில் கொளுத்தி வந்தது. கடும் அனல் காற்று வீசி வந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நிலையில் இன்று மாலை குடியாத்தம், மேல் ஆலத்தூர், பேரணாம்பட்டு, செம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
கூட நகரம், சின்ன சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டிய நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்கட்டி மழையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் மாதனுர் பகுதியில் திடீரென சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மே 7, மே 8 ஆகிய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications