என்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே "அக்ரி".. ரொம்ப வித்தியாசமா இருக்கே!
திருப்பத்தூர் கூட்டத்தில் அழுதுகொண்டே அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்தார்.
Recommended Video

திருப்பத்தூர்: செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கலாம்.. அல்லது செய்ய போறதை சொல்லியாவது ஓட்டு கேட்கலாம்.. ஆனால் கண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்கலாமா? அப்படித்தான் இவர் கேட்டிருக்கிறார்!
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இன்னமும் இவர் மீது மாவட்டத்தில் அதுதொடர்பான வடுக்கள் மாறாமல் உள்ளது.
மேலும் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நேரடியாக தூக்கி அடிக்கப்பட்டவர் என்ற சம்பவமும் மக்கள் மனதில் நினைவில் உள்ளது.

அதிமுக தலைமை
ஜெயிலுக்கு போய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அக்ரி கிருஷ்ணமுர்த்தியை ஜெயலலிதா கட்சியில் கடைசிவரை சேர்க்கவே இல்லை. ஆனால், அவர் மறைவுக்கு பிறகு உள்ள அதிமுக தலைமையோ, இவரது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டதுடன், தொடர்ந்து நெருக்கம் காட்டியே வருகிறது.

கட்சி நிர்வாகிகள்
இந்நிலையில் திருப்பத்தூரில் அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வீரமணிதான் இந்தக் கூட்டத்துக்கு தலைமை. இதில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார். பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிறைய பேர் கலந்து கொண்டனர்.

வலியை தாங்கினேன்
அந்த கூட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச ஆரம்பித்தார். "நான் தேர்தலில் பல தோல்விகளை கண்டவன். போன முறை எனக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தார். ஆனால் நான் வெறும் 250 வாக்கு வித்தியாசத்தில் தோத்து போயிட்டேன். அந்த வலியை என்னால் மறக்கவே முடியாது. இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டேன்.

கண்ணீர்
இப்போது திரும்பவும் எனக்கு அதிமுக இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளது என்றார். இதை சொல்லும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதுவிட்டார் அக்ரி. அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக இருந்தார்.

வெற்றி உங்களுக்குதான்
இதனால் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அக்ரி அழுவதை பார்த்து ஒரு சிலர் கண் கலங்கிவிட்டனர். உடனே பக்கத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் அழுது கொண்டிருந்தவரை சமாதானம் செய்தார். குடிக்க தண்ணீர் கொடுத்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நீங்கள் தான் வெற்றி பெறுவது உறுதி என கரகோஷம் எழுப்ப தொடங்கி விட்டார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications