வேலூரில் பரபரப்பு.. தேர்தல் நாள் அதுவுமா.. அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை
அஇஅதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார்
Recommended Video
வேலூர்: தேர்தல் நாள் அதுவுமா, அதிமுக பிரமுகர் ஒருவர் வேலூரில் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏராளமான எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வேலூரில் தேர்தல் நடந்து வருகிறது. இதனால் அதிமுக, திமுக தரப்பினர் மும்முரமாகவும், ஆர்வமாகவும் ஓட்டு போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு அதிமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர் என்பவர். இவருக்கு 35 வயதாகிறது. இவர் ஒரு மாட்டு வண்டித்தொழிலாளி. இந்த பகுதி அதிமுகவில் இவர் மிகவும் பிரபலம். கட்சியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்.
இன்று விடியற்காலை சேண்பாக்கம் ஆர்ச் அருகில் இவர் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சேகரை சரமாரியாக வெட்டிகொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே சேகர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து வடக்கு போலீசார் விரைந்து சென்று, சேகரின் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக சேகர் கொல்லப்பட்டார், யார் கொன்றது, என்ன பிரச்சனை என்பது உடனடியாக தெரியவில்லை.
எனினும் போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள். தேர்தல் நாள் அதுவுமாக இன்று அதிமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications