வேலூர் மக்களுக்கு குஷி செய்தி.. பெங்களூர், சென்னைக்கு இனி 20 நிமிடங்களில் பறக்கலாம்
வேலூர்: சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய தொழில் மாவட்டம்தான் வேலூர். இந்த மாவட்டத்தில் விமான போக்குவரத்தை தொடங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விமான சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாவட்டம் வேலூர்தான். இங்கு உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளில் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. மட்டுமல்லாது சிஎம்சி மருத்துவமனைக்கு நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இது தவிர இம்மாவட்டத்தில் அமைந்துள்ள வைணுபாப்பு விண்வெளி ஆய்வு மையம் சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட மாவட்டத்திற்கு விமான சேவை வேண்டும் என்பது, இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. நேரு பிரதமராக இருந்த காலத்தில் நாடு முழுவதும் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது சிறு சிறு நகரங்களிலும், தற்காலிக விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அப்படித்தான் வேலூரில் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையமும் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அப்படியே இது கைவிடப்பட்டது.
சென்னை மற்றும் பெங்களூருக்குதான் இந்த மாவட்டத்திலிருந்து மக்கள் அதிகம் பயணிக்கின்றனர். இந்த இரண்டு நகரங்களுக்கும் விரைவான ரயில் சேவை, தங்க நாற்கர சாலை ஆகியவை இருப்பதால் விமான சேவைக்கான தேவை எழவில்லை. ஆனால் மேற்குறிப்பிட்டதை போல தோல் தொழிற்சாலைகள் அதிகரிக்க தொடங்கியதால் ஏராளமான வெளிநாட்டு மூலதனம் இங்கு குவிந்தது. எனவே வேலூரிலிருந்து அரபு நாடுகளுக்கு பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இவர்கள் பெங்களூர், சென்னை விமான நிலையம் சென்றுதான் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டும். எனவே வேலூரில் உள்ள விமான நிலையத்தை சீரமைத்து விமான சேவையை தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவடைந்தது. இதனையடுத்து 2016ம் ஆண்டு உதான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு விமான நிலையங்களை மேம்படுத்தி அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது என முடிவெடுக்கப்பட்டது. அப்படியாகத்தான் வேலூர் விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டது.
சுற்றுப்புற சுவர்களை பலப்படுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகளை சீரமைப்பது, ரன்வே எனப்படும் ஓடுதளத்தை அகலப்படுத்துவது உள்ளிடட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் ஆகியவை கட்டப்பட்டன. மேலும் கடந்த அக்டோபர் மாதம் விமான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
டெல்லியில் இருந்த வந்த விமானம், இந்த விமான நிலையத்தில் இறங்கி, மீண்டும் பறந்து சென்றது. இந்த சோதனையில் சிக்னல் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை வெற்றியடைந்த நிலையில் விரைவில் வேலூரிலிருந்து விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக 20 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் பெரிய விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விமான சேவை தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான சேவை சாத்தியமானால் சென்னைக்கும், பெங்களூருக்கும் வெறும் 20 நிமிடங்களில் சென்று சேர்ந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications