காங்கிரஸின் கோட்டை அரக்கோணம்.. அது அப்போ.. ஆனால் இப்போ.. யார் வசம் செல்லும்? இதோ ஓர் அலசல்
Recommended Video

அரக்கோணம்: தமிழகத்தின் அதி சூடான நகரங்களில் ஒன்று அரக்கோணம். வருடா வருடம் கோடை காலத்தில் அதிக வெப்ப நிலை பதிவாகும் நகரங்களில் அரக்கோணமும் ஒன்று. அந்த அரக்கோணம் லோக்சபா தொகுதியைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
அருந்தமிழ் குன்றம் என்பது தான் இதன் பூர்வீகப் பெயர். அது பின்னர் மருவி அரக்கோணம் என்றானதாக கூறப்படுகிறது. ஆறு கோணம் என்பது மருவியே அரக்கோணம் என்று ஆனதாகவும் இன்னொரு பேச்சு வழக்கு உண்டு. இந்த ஆறு கோணம் என்ற பெயர் வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. அதாவது அரக்கோணத்தைச் சுற்றிலும் உள்ள காஞ்சிபுரம், தக்கோலம், மணவூர், திருவாலங்காடு, திருத்தணி, பொன்னை மற்றும் சோளிங்கர் ஆகிய ஆறு ஊர்களைக் குறிப்பதே இந்த ஆறு கோணம் என்பதாகும்.
அரக்கோணம் தொகுதியானது திருத்தணி, அரக்கோணம் ,சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.

500 கேள்விகள்
இந்த தொகுதியின் எம்பியாக இருப்பவர் ஜி. ஹரி. இவர் முதல் முறையாக இந்த தொகுதிக்கு தேர்வு செய்யப்படுகிறார். அதிமுகவை சேர்ந்த இவருக்கு 58 வயதாகிறது. இவர் இதுவரை 57 விவாதங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் 500 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரது வருகை பதிவு பிரமாதமாக உள்ளது, 89 சதவீதம்.

78 சதவீதம்
இந்த தொகுதியில் கடந்த ஆண்டு 14,01,545 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 692,883 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 708,662 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு வாக்கு சதவீதம் 78 சதவீதமாக உள்ளது.

தோல்வி
கடந்த தேர்தலில் ஹரி 493,534 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் என் ஆர் இளங்கோ 252,768 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். வன்னியர், முதலியார் சமூகத்தவர் பெரும்பான்மையாக உள்ள அரக்கோணத்தில் இந்த இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வென்று வந்துள்ளனர் என்பது கூடுதல் தகவலாகும்.

6 முறை
அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பு இந்தியாவின் மிகப் பழமையான ரயில் சந்திப்புகளில் ஒன்று. அதேபோலத்தான் அரக்கோணம் லோக்சபா தொகுதியும் பல்வேறு கட்சிகளின் சந்திப்பாக உள்ளது. இங்கு திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. பாமக, தமாகா தலா ஒரு முறை வென்றுள்ளன. அதிக முறை வென்ற கட்சி காங்கிரஸ். அதாவது மொத்தம் 6 முறை வென்றுள்ளது.

யார் வசமாகும்
அரக்கோணம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தாலும் கூட 1996 தேர்தலுக்குப் பிறகு அதற்கு அங்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. 1998 தேர்தலில் தமாகா வென்றிருந்தது. அத்தோடு சரி. அதன் பின்னர் திராவிடக் கட்சிகள் மற்றும் பாமக பக்கம் சாய்ந்து விட்டது அரக்கோணம்.
2019 தேர்தலில் அரக்கோணம் யார் வசமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications