பெண் ஆட்சியருக்கே பாதுக்காப்பில்லை.. துணை சபாநாயகர் அதுக்கு மேல! விஜய்க்கு அர்ஜுன் சம்பத் வார்னிங்!
வேலூர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத சூழல் நிலவும் நிலையில், முதல்வர் விஜய் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போதுபெண் ஆட்சியருக்கு கூட பாதுகாப்பில்லை சூழல் இருப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
வேலூரில் திருக்குடை அனுப்பும் நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கார்த்திகை தீபம் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. அதற்காக வேலூரிலிருந்து திருக்குடைகள் அனுப்பப்பட்டது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் வி.ஐபி கலாச்சாரம் தலைதூக்குகிறது. அண்ணாமலையாரை அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த வேண்டுமென பழனிபாபா குழு தேசிய லீக் பெயரில் நேற்று உள்ளே நுழைய முயன்றனர். அது தடுக்கப்பட்டது.
அர்ஜுன் சம்பத்
தமிழகத்தில் முதல்வர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சணையை உருவாக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சணையில் ஈடுபடுபவர்களை கைது செய்து தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும். காஞ்சி கந்தகோட்டத்தில் இந்து அறநிலையத்துறையினர் கும்பாபிஷேக தேதியை திட்டமிட்டு பத்திரிகை அச்சடித்த பின்னர் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாது என கூறியதால் தேதியை மாற்றுகின்றனர். அதனை மாற்ற கூடாது.
உச்சநீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்து கார்த்திகை தீபத்தை தூணில் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றமும் தடையில்லை என கூறியுள்ளது. தீபம் ஏற்றுவதற்காக வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் சார்பில் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றத்தில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மத்திய அரசு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்டகாலமாக நடத்தபடாமல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என அரசு கூறுகிறது. நடத்தபடவில்லை என்றால் மத்திய அரசு நிதி கிடைக்கவே கிடைக்காது. உள்ளாட்சிகளில் பணிகள் முடங்கி சாலைகள் குண்டும் குழியுமாக சுகாதாரமற்ற நிலையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மீதும் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மீதும் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
வாக்குசீட்டு படி உள்ளாட்சி தேர்தல் நடந்த பல இடங்களில் பாஜக வெற்றி பெற்று காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. ராகுல் காந்தி சதி செய்கிறார். சோனியா காந்தி வாழ்க்கை சரிதையில் 10 ஆண்டுகள் குடியுரிமையில்லாமல் இருந்ததையும், இத்தாலி இந்திய காங்கிரசை கைப்பற்றியதையும் காங்கிரஸ் ஊழல்களை எல்லாம் மறைத்துள்ளனர்.
நூலக ஊழல்
தமிழகத்தில் நூலகங்களில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதற்கு அடிப்படையாக இருப்பது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தான். மனுஷ்ய புத்திரனை நூலகத்திற்கு பொறுப்பாக போட்டனர். அவர் தகுதி அற்றவர். இடது சாரிகள் விசிகவிடமும் முதல்வர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்தவர்கள் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர்.
மிஷனரி ஆட்சி
ஜோசப் விஜய் ஆட்சியில் நூலகங்களில் ஊழல் என்ற பொய்யான குற்றச்சாட்டை உருவாக்குகின்றனர். அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் திராவிட மாடல் ஆட்சிக்கும் மிஷனரி ஆட்சிக்கும் எந்த வேறு பாடும் கிடையாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உள்ளது. துணை சபாநாயகர் ஒருவரை தாக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியருக்கு தவறான குறுஞ்ச்செய்தி அனுப்புகிறார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பில்லை" என கூறினார்.


Click it and Unblock the Notifications
