புது பொண்டாட்டியுடன் சண்டை.. பைக்கை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து குதித்த ராணுவ வீரர்!
மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
வேலூர்: புது பொண்டாட்டியுடன் நடுரோட்டிலேயே சண்டை போட்டு கொண்டு வந்த மகேஷ்.. திடீரென பைக்கை நிறுத்திவிட்டு, மேம்பாலத்தில் ஏறி நின்று கொண்டு கீழே குதித்ததில், தலைகீழாக விழுந்து மண்டை பிளந்து உயிரிழந்து விட்டார்.
வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே. நகரை சேர்ந்தவர் மகேஷ். 30 வயதான இவர் ஒரு ராணுவவீரர். இவருக்கு புவனேஸ்வரி என்பவருடன் போன மாசம்தான் கல்யாணம் ஆனது. புவனேஸ்வரி, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இருவரும் இன்று காலை பைக்கில் வந்து கொண்டிருந்தனர். கலெக்டர் ஆபீஸ் வரும்போது ரெண்டு பேருக்கும் சண்டை வந்துவிட்டது. அதனால் ரோடு முழுக்க சத்தமாக சண்டை போட்டுக் கொண்டே சென்றார்கள்.
மேம்பால சுவற்றில் சென்று கொண்டிருந்தபோது, டென்ஷன் அதிகமாகிவிட்ட மகேஷ், ஓட்டி வந்த பைக்கை நிறுத்திவிட்டு, மேம்பால சுவற்றின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். இதில், கலெக்டர் ஆபீஸ் ஒட்டி உள்ள பஸ் ஸ்டேண்ட் அருகே வந்து தலைகீழாக விழுந்தார். அவரது தலை 2ஆக பிளந்து ரத்தம் கொட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, மேம்பாலத்தில் நின்றபடி கதறி துடித்தார். அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். உடனடியாக சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் தரப்படவும் அவர்கள் விரைந்து வந்தனர்.
அப்போது புவனேஸ்வரியை ஆட்டோவில் உட்கார வைத்து ஸ்டேஷன் செல்ல முயன்றபோது, அவர் மயக்கம் அடைந்துவிட்டார். அதனால் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது. பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் சத்துவாச்சாரி மக்களை பதற வைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications