வேலூர் எஸ்.பி அலுவலகம் எதிரே திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. டிரைவர் ஒரே ஓட்டம்.. வேலூரில் பதற்றம்!
வேலூர் : வேலூர் எஸ்.பி அலுவலகம் எதிரே இன்று திடீரென கார் ஒன்று தீப்பற்றி மளமளவென எரிந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் எஸ்.பி அலுவலகம் எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ பற்றியது. சுதாரித்த கார் ஓட்டுநர், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதைய்ச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அருண்குமாரின் மனைவி வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அருண்குமாரின் மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அருண்குமார், காரில் புறப்பட்டுள்ளார். அப்போது திடீரென என்ஜினில் இருந்து புகை வந்ததால் காரில் இருந்து இறங்கியுள்ளார்.
அப்போது புகை நெருப்பாக மாறி காரில் மளமளவென பற்றத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அருண்குமார் காரை விட்டு அகன்று சென்றார். கார் மளமளவென பற்றி எரிந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமானது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 20 நிமிடங்கள் போராடி காரில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். கார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications