கிளாஸ் ரூமிலேயே.. திடீரென கை, காலை உதைத்து.. வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி.. வெளியான சிசிடிவி காட்சி
பள்ளி வகுப்பறையில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் மாணவி
Recommended Video
வேலூர்: கிளாஸ் ரூமுக்குள் நுழைந்து பெஞ்சில் உட்கார்ந்த உடனேயே வலிப்பு வந்து விடுகிறது.. ஒரு கை, ஒரு காலை இழுத்து கொண்டே பெஞ்ச் மீது சாய்ந்து.. அப்படியே கீழே விழுந்து உயிரும் பிரிந்து விடுகிறது.. 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த இந்த சிசிடிவி காட்சிதான் தற்போது வெளியாகி மக்களின் மனசை பதற வைத்து வருகிறது!
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்.. இவரது மகள் நிவேதினி.. 14 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கிளாஸ் ரூமில் திடீரென மாணவி மயங்கி விழுந்ததாகி கூறி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். உடனே மாணவியின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் தகவல் தந்துள்ளது.

டாக்டர்கள்
ஆனால் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லுமாறு சொல்லி உள்ளனர்.. அதன்படியே ஆஸ்பத்திரிக்கு சென்றும் பிரயோஜனமில்லை.. உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகளின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு பெற்றோர் அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

வலிப்பு நோய்
"எங்க பொண்ணுக்கு வலிப்பு வந்து தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக ஸ்கூலில் இருந்து தகவல் வந்தது.. நாங்கள் உடனே மேல்சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திகொண்டு சென்றோம். ஆனால் பாதி வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கிறோம்.. அதன்பிறகுதான் மகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்" என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார்கள்.

கிளாஸ் ரூம்
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். அப்போது கிளாஸ் ரூமில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.. அந்த வீடியோ காட்சியையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சி
அதில், கிளாஸ் வழக்கம்போல நடந்து கொண்டிருக்கிறது.. ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்.. மாணவிகள் பெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றனர்.. அப்போது நிவேதினி கிளாஸ் ரூமுக்குள் நுழைகிறார்.. வந்து தன் பெஞ்சில் உட்கார்ந்து கொள்கிறார்.. அதுவரை இயல்பாக இருந்தவர் திடீரென பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவி மீது மயங்கி விழுகிறார்.

அதிர்ச்சி
உடனே பதறிய மற்ற மாணவிகள் என்ன ஏதென்று பார்ப்பதற்குள் நிவேதினிக்கு வலிப்பு வந்துவிடுகிறது.. கை, காலை உதைத்தவாறே, பெஞ்சில் இருந்து கீழே தொப்பென்று விழுகிறார்.. மற்ற மாணவிகள் ஓடிப்போய் நிவேதாவை தூக்குகிறார்கள்.." சுறுசுறுப்பாக கிளாஸ் ரூமுக்குள் நுழைந்த மாணவி, அடுத்த செகண்டிலேயே வலிப்பு வந்து.. கை, காலை உதைத்து கொண்டு கீழே விழுந்து உயிரையும் விட்ட இந்த சிசிடிவி காட்சி மக்களை பதற வைத்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications