“30 வருஷமா சாக்கடையில் கிடந்தோம்… ஸ்டாலின் ஐயாதான் வீடு கொடுத்தார்..” -ஹேப்பியான நரிக்குறவ மக்கள்
வேலூர்: சுதந்திரம் பெற்று பொன்விழாவைக் கொண்டாடுகிறது நாடு. இந்த சுதந்திர இந்தியாவில்தான் இன்னும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் தெருத் தெருவாகத் திரிந்து வருகிறார்கள் நரிக்குறவ மக்கள்.
நாடோடிகளாகத் திரிந்துவந்த வேலூர் நரிக்குறவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த 2 வருடக்கால ஆட்சியில் ஏறக்குறைய அனைத்து மக்களுக்குமாக சேர்த்து 8 ஆயிரத்துக்கும் மேல் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி உள்ளோம்'' என்கிறார் வேலூர் ஆட்சியர்.

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பட்டா மனையில் இப்போது கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்பது சிறப்புச் செய்தி.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ் என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம். "கடந்த 2 ஆண்டுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. இதுவரை வீட்டுமனைப் பட்டா இல்லாமல் இருந்துவந்தவர்களுக்குப் பட்டா வழங்கியபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை நான் கண்கூடாகக் கண்டேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நேரடியாகவே எங்கள் மாவட்டத்திற்கு வந்தார். அவரே தனது கைகளால் 4 ஆயிரம் பேர்களுக்கு மேலாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இவர்களில் பெரும்பாலானவர்களுக்குச் சொந்தமாக வீடு இல்லை. அவர்கள் சாலையோரங்களில், மர நிழல்களில், குப்பை மேடுகளில் எனப் பல பகுதிகளில் ஆதரவற்றவர்களாக வாழ்ந்துவந்தனர்.

அப்படியானவர்களை அடையாளம் கண்டுதான் முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கினார். அந்தநேரத்தில் அந்த மக்கள் அடைந்த சந்தோசம் இருக்கிறதே, அது அவர்கள் இதுவரை வாழ்நாளில் அனுபவிக்காத சந்தோஷம். வெறுமனே அவர்களுக்குப் பட்டா மட்டும் வழங்கவில்லை. அவர்கள் குடியிருப்பதற்காக வீடுகளையும் அரசு சார்பில் கட்டித் தந்து வருகிறோம். அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசு இதில் இன்னொரு ஆக்கப்பூர்வமான காரியத்தையும் செய்துள்ளது. மலையடிவாரங்களில் வெட்டவெளியில் ஆதரவு இல்லாமல் வாழ்ந்துவந்த நரிக்குறவ மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, அந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றியுள்ளது.

கிட்டத்தட்ட 900 நரிக்குறவ மக்களுக்கு மட்டும் இதுவரை வீட்டுமனைப்பட்டாக்களை முதல்வரின் ஆணையின் பேரில் வழங்கியுள்ளோம். இப்போதுபுதியதாக வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் வீடு கட்டித் தருவதற்காக ஒரு தன்னார்வலர் முன்வந்தார். அவரது உதவியையும் எடுத்துக் கொண்டு, அம்மக்களுக்கு வீடும் புதியதாகக் கட்டித் தருவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இத்தனைக் காலம் ஊர் ஊராகவும் தெருத் தெருவாகவும் நிரந்தரமற்ற வாழ்க்கையை நடத்திக் கொண்டுவந்த அம்மக்கள் இந்த ஆட்சியின் மூலம் ஒரு நிரந்தரமான வசிப்பிடத்தைப் பெற்றுள்ளார்கள். இது அவர்களின் வாழ்நாள் கனவு. அதை இன்றைக்கு அடைந்துள்ளார்கள். அவர்களைப்போலவே ஒரு ஆட்சியராக எனக்கும் இதில் மனப்பூர்வமான மகிழ்ச்சி.

மேலும் அந்தப் பகுதிக்குத் தெரு விளக்கு அமைத்துத் தருவது, சாலைகள் போட்டுத் தருவது, குடிநீர் வசதிகளை உருவாக்கித் தருவது போன்ற பணிகளுடன் சேர்த்து, அந்த நரிக்குறவ மக்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் இப்போது எடுத்துள்ளோம்.
இன்னும் நாங்கள் போகவேண்டிய தூரம் அதிகம் உள்ளது, மேற்கொண்டு பலருக்குப் பட்டா தர வேண்டி உள்ளது. அதற்கான தொடர் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்றார் ஆட்சியர்.
புதியதாக வீட்டுமனைப் பட்டா கிடைத்த நரிக்குறவ மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களில் சிலரிடம் பேசினோம்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த செம்பருத்தி நம்முடன் பேசினார். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்துவருகிறார். "நாங்கள் முதலில் காட்பாடி இந்திரா நகரில்தான் வாழ்ந்துவந்தோம். கிட்டத்தட்ட 30 வருடங்களாக அங்குதான் வாழ்ந்துவந்தோம்.
ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் வேறு ஊருக்குப் போய்விடுவோம். ஏனென்றால் வெள்ளம் வந்துவிடும். மழைக்காலம் போய், வெயில் காலம் வந்தால் அந்த இடம் காய்ந்துவிடும்.
ஆகவே திரும்ப காட்பாடிக்கே வந்துவிடுவோம். 2021இல் வந்த மழை வெள்ளத்தில் எங்கள் குடிசைகள் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டன. இத்தனை வருடங்களாக எங்களுக்கு என்று ஒரு வீடு இல்லை, வாசல் இல்லை, நிலம் இல்லை, எதுவுமே இல்லை.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஐயா இப்போது எங்களுக்கு எல்லாம் வீட்டுமனைப் பட்டா கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் இப்போது கலெக்டர் வீடு கட்டிக் கொடுப்பதற்கான கட்டுமான வேலைகளைச் செய்ய ஆணையிட்டிருக்கிறார்.
இத்தனைக் காலம் அநாதையாக வெயில் மழையில் கிடந்தோம். இப்போதுதான் எங்களுக்கு என்று ஒரு வீடு, மனை கிடைத்திருக்கிறது. அதைக் கொடுத்த மகராசன் ஸ்டாலின் அய்யாவை வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டோம்" என்கிறார் உணர்ச்சி பொங்க.
"போன வருஷம் பெய்த மழையில் ஒரு ஒட்டுத்துணிகூட இல்லாமல் அடித்துக் கொண்டு போய்விட்டது. வீட்டிலிருந்த சாமான், பெட்டி படுக்கை என ஒன்றும் திரும்பக் கிடைக்கவில்லை. பல வாரம் வேறு இடம்கூட போக முடியாமல், அந்தத் தண்ணீரிலேதான் வாழ்ந்தோம்.

இப்போதுதான் வீட்டுமனைப் பட்டா கொடுத்திருக்கிறார்கள். வீடும் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனை வருஷத்தில் ஒருநாள் கூட நாங்கள் நிம்மதியாகத் தூங்கியதில்லை. அவ்வளவு தொல்லை. பகலில் நாய் தொல்லை. இரவில் கொசுத் தொல்லை. எவ்வளவோ அனுபவித்துவிட்டோம். இப்ப எங்களுக்கும் ஒரு வீடு இருக்கிறது. எங்குப் போனாலும் நிம்மதியா எந்த நேரமும் வீடு திரும்பலாம். அது எவ்வளவு பெரிய சந்தோஷம் சொல்லுங்க?" என்கிறார் மற்றொரு பெண்மணி.
"நாங்கள் வசித்துவந்த இந்திரா நகர்ப் பகுதி மதிலேரிக்கு பக்கம். ஆகவே மழைக்காலங்களில் வெள்ளம் குடிசை பகுதிக்கு மேல் வரை போகும். கடந்த வருடம் அதிக மழை. ஆகவே ஒட்டுமொத்த குடிசைகளும் காலி. அதன் பிறகு அதிகாரிகளைப் போய் பார்த்து முறையிட்டோம்.
நாங்கள் போய் சொன்னதும், அதிகாரிகள் சமத்துவ புரத்தில் தங்க இடம் கொடுத்தார்கள். அங்கேயே 3 மாதம் வரை 3 வேலையும் அரசு சார்பில் இலவசமாக உணவு சமைத்துப் போட்டார்கள்.

அதன்பிறகுதான் எங்களுக்கு என்று மேடான பகுதியில் வசிக்க இடம் கொடுக்கும்படி முறையிட்டோம். எங்கள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் 5 நாள்களில் அவர் கையால் பட்டா வழங்கி இருக்கிறார். அதில் வீடுகளும் கட்டி வருகிறார்கள்" என்கிறார் நரிக்குறவ மக்களின் முக்கியஸ்தர்களில் ஒருவர்.
ஆட்சியர் இவர்களுக்காக இப்போது வேலூர் வன்றந்தாங்கல் பகுதியில் இடங்களை ஒதுக்கித் தந்துள்ளார். ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட் நிலம் என்ற அளவில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 30 குடும்பங்கள் இதுவரை இங்கே குடியேறி உள்ளன.
இங்கே மின்சார வசதி உடனடியாக வழங்கப் பட்டுள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு குடிநீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறும் போட்டுக் கொடுத்துள்ளது அரசு.

இங்கே கட்டப்படும் அனைத்து கான்கிரீட் வீடுகள். அனைத்து குடும்பங்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் என எல்லா வசதிகளையும் தன்னார்வலர் உதவியுடன் நவீனமாகச் செய்து தந்துள்ளது தமிழ் நாடு அரசு.
இதற்கு முன்னதாக இவர்களுக்கு எம்.பி.சி. சாதிச் சான்றிதழை அரசு வழங்கி இருந்தது. அதனை மாற்றி இப்போது எஸ்.டி சாதிச் சான்றிதழையும் வங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நாடோடி மக்களை வீடோடு வாழ வழி செய்திருக்கிறது அரசு.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications