உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்தது ஏன் தெரியுமா? முதல்வர் பழனிச்சாமி கொடுத்த பரபரப்பு விளக்கம்!
உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் சில திரைப்படங்களில் நடிக்க வைத்தது ஏன், என்று முதல்வர் பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
வேலூர்: உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் சில திரைப்படங்களில் நடிக்க வைத்தது ஏன், என்று முதல்வர் பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது .

சட்டம்
இன்று பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. திமுகவில் கடுமையாக கோஷ்டி மோதல் இருக்கிறது. திமுக முன்னாள் மேயரை திமுக நிர்வாகியின் மகனே கொன்றுள்ளார். அவர்களை தமிழக போலீஸ் உடனடியாக கைது செய்தது. சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

திமுக எப்படி
திமுக வேட்பாளருக்கு நெருக்கமானவரிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால் வேலூர் தேர்தலை வேறு காரணத்திற்காக நிறுத்தியதாக திமுக மக்களை திசை திருப்பி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பொய் சொல்வதையே வழக்கமாக வைத்து இருக்கிறார்.

காரணம்
வேலூர் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான சீருடை வழங்கப்படுகிறது. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கேபிள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன் தெரியுமா?
உதயநிதி அரசியலுக்கு வருவது முன்பே திட்டமிடப்பட்டது. உதயநிதியை தலைவராக்குவதற்காகவே சில திரைப்படங்களில் நடிக்க வைத்தனர். தலைவர் மகனே தலைவராவது தான் வாரிசு அரசியல். திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமேதான் இருக்கிறது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications