பாஜக டப்பா இன்ஜின்.. திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின்.. திருப்பத்தூரில் ஸ்டாலின் அதிரடி
திருப்பத்தூர்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திருப்பத்தூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக டப்பா இன்ஜின் முன்பு, திராவிட மாடல் எனும் சூப்பர் பாஸ்ட் இன்ஜின் தலைகுனியாது என்றும் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கிளைச் செயலாளர் என்றும் விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசும்போது, "1.30 கோடி பெண்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்திருக்கிறோம். நேற்று காலையில் தமிழக பெண்கள் முதன்முதலில் கேட்ட ரிங்டோனே மகளிர் உதவித் தொகை 5 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆனதுதான்.

மாதம் மாதம் மகளிருக்கு 1,000 கொடுக்கிறோம். இந்த மாதம் ஏன் 5,000 கொடுத்தோம் என்பதை விளக்கியுள்ளோம். பாஜகவினர் வழக்கு தொடர்ந்து, அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த சதி செய்தனர். அதை முறியடித்துள்ளோம். மக்களுக்கு சர்ப்ரைஸ் தந்து, துரோகிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம். இதுதான் முத்துவேல் கரூணாநிதி ஸ்டாலின் ஸ்டைல்.
எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்
ஓரவஞ்சனைக்கு ஒரு முகம் இருந்தால் அதுதான் பாஜக. இதுவரை பாஜக தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டம் அறிவித்துள்ளார்களா. இதுவரை பிரதமரோ, உள்துறை அமைச்சர்களோ ஏதாவது செய்துள்ளார்களா. மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இதற்கு பாஜகவும் பதில் இல்லை. பாஜகவின் கிளை செயலாளராக உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் பழனிசாமி. சட்டம் ஒழுங்கு பற்றி பேச உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. கொடநாடு கொலை கொள்ளை, மரணங்கள் இதையெல்லாம் மக்கள் மறந்துவிட்டனர் என நினைக்கிறீர்களா. பதவி கொடுத்தவரின் காலை வாரியவர் எடப்பாடி பழனிசாமி. தவழ்ந்து தவழ்ந்து ஊழல் செய்து முதல்வரானவார் எனக்கு சவால் விடலாமா.
பாஜக டப்பா இன்ஜின்
அதிமுகவை காப்பாற்ற டெண்டர்களில் அள்ளிவிட்டு, தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள் உள்ளனர் என்றாரே. உங்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது என்றதற்கு, யார் மீதுதான் வழக்கு இல்லை என்று சொல்லி அசரடித்தவர். பச்சை துண்டு போட்ட பச்சை துரோகி பழனிசாமி என்று மக்கள் சொன்னது மறந்துவிட்டதா. 1,000 ஆண்டுகள் நின்னு பேசும் திட்டங்களை 5 ஆண்டுகளில் செய்துள்ளோம்.
திமுக அரசை களங்கப்படுத்த பழனிசாமி முயற்சி செய்கிறார். பழனிசாமியின் அவதூறை மக்கள் ஏற்க மாட்டார்கள்.மாவட்டம், தொகுதி வாரியாக அத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாம் தமிழ்நாட்டின் வெற்றிக்காக போராடுகிறோம். திராவிட மாடலின் சூப்பர் பாஸ்ட் இன்ஜின் முன்பு பாஜகவின் டப்பா இன்ஜின் நிற்காது. சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலை குனியாது.
டெல்லி அணியா.. தமிழ்நாடு அணியா
டப்பா இன்ஜின் ஏறி தமிழ்நாட்டின் புறவாசல் வழியாக நினைக்கும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு என்கிற பெயரையே மாற்ற துடிக்கிறார்கள். போடு தோப்புக்காரணம் என்றால் ஸ்டாப் சொல்லுமளவுக்கு போடுவார். அதுதான் பழனிசாமி. அவரால் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்யும் துரோகங்களை தட்டி கேட்க முடியுமா. அதிமுக என்பது பாஜகவின் கிளை அமைப்பு என்பதை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
ஆட்சி மாறினால் திட்டங்கள் நின்றுவிடும். தமிழ்நாடு அணியா.. டெல்லி அணியா என்கிற இந்த ஜனநாயக போரில் அனைவரும் திமுகவை ஆதரிக்க வேண்டும். தலைமை அறிவிப்பவர் தான் வேட்பாளர். திறமையானவர் தான் வேட்பாளர். அதை தலைமை பார்த்துக் கொள்ளும். நீங்கள் களப்பணியில் கவனம் செலுத்துங்கள் வெல்வோம் ஒன்றாக" என்றார்.,
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications