எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் வேலு! கண் ஜாடை அறிந்து செயலாற்றுவார்! முதலமைச்சர் பாராட்டு!
திருப்பத்தூர்: எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் வேலு என முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
துரைமுருகன் ஊரில் எ.வ.வேலுவுக்கு முதலமைச்சரிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டை அவரது ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.
துரைமுருகனை பற்றி திருப்பத்தூரில் பேசும் போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அமைச்சர் என்ற ஒற்றை வரியில் அவரை பற்றி முடித்துக் கொண்டார் ஸ்டாலின்.
அமைச்சர் எ.வ.வேலுவை பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

கண் ஜாடை
"நான் என்ன நினைப்பேன் என்பதை, நான் சொல்லாமலேயே, என் கண் ஜாடையைப் புரிந்து கொண்டு செயலாற்றுவதில் எ.வ.வேலு முன்னிலையில் இருக்கிறார்" என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர் எ.வ.வேலு. கலைஞரின் மனதை நிறைவு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல, எளிதான செயல் அல்ல, நம் துரைமுருகன் அவர்களுக்குத் தெரியும். அவரோடு நெருங்கிப் பழகக்கூடியவர்களுக்குத் தெரியும்.

கருணாநிதி மனதில்
''கலைஞர் மனதை அறிந்து, புரிந்து, அதைப்போலவே செயல்படுத்திக் காட்டுவதும் எளிதான செயல் அல்ல. அதில் ஒரு சிலர்தான் சிறப்பாகச் செயல்பட்டு தலைவர் கலைஞரின் பாராட்டைப் பெற்றார்கள். அதில் எ.வ. வேலுவும் ஒருவர். அதனால்தான், 'எதிலும் வல்லவர் வேலு; அதனால்தான் அவர் எ.வ. வேலு' என்று நான் குறிப்பிட்டேன். 'எ' -எதிலும், 'வ' - வல்லவர்.

எதிலும் வல்லவர்
அத்தகைய எதிலும் வல்லவர் உங்கள் மாவட்டத்திற்கு கிடைத்திருக்கிறார். அதனால், திருப்பத்தூர் - 'திரு-புத்தூர்' என்று சொல்லும் அளவுக்குப் புதிதாக இப்போது மாறிக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த 25-ஆம் நாளன்று இந்த விழா நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரம், லேசான காய்ச்சல் எனக்கு ஏற்பட்டு, அது முழுமையாக குணமாகாத காரணத்தால், மருத்துவர்கள் "ஒருசில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது" என்று எனக்கு உத்தரவிட்டதால், அந்த குறிப்பிட்ட தேதியில் என்னால் வர முடியவில்லை.

வேலூர் நிகழ்ச்சி
இதனிடையே இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அமைச்சர் துரைமுருகனை பற்றி இன்று மாலை வேலூரில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் குறிப்பிட்டு பாராட்டி பேசவிருந்ததால் காலை திருப்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அதனை தவிர்த்ததாக தெரிவித்தார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications