சிதம்பரம் தொகுதியில் போட்டி... திருமாவளவன் உறுதி
வேலூர்: வருகிற லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக, தொகுதி பங்கீடு குறித்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை இணக்கமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.

இந்தநிலையில், வேலூர் ஊரிசு கல்லூரியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: மு.க. ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன் என்றார்.
கூட்டணியை உருவாக்கி பல மாதங்களாக தி.மு.க.வுடன் செயல்பட்டு வருவதால் தி.மு.க. கூட்டணியில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.
2 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்றும், தி.மு.க கூட்டணியில் நாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை வழங்கி உள்ளோம். இறுதி பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications