குறைகளை சொல்லுங்க... திண்ணை.. மரத்தடி.. பெட்டிக்கடையில் அமர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின்
Recommended Video
வேலூர்: மரத்தடி, பெட்டிக்கடையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று காலை வேலூரில் பல இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். வேலூர் ராமநாயக்கன் பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பு
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தெக்குப்பட்டி, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை ஆகிய இடங்களில் மரத்தடி, பெட்டிக்கடை மற்றும் திண்ணையில் அமர்ந்து, பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

உழவர் சந்தை
காலையில், டீ-சர்ட், பேன்ட், ஷூ அணிந்துகொண்டு வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றார். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கைகுலுக்கி உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

இளைஞர்களுடன் செல்பி
அதே சமயம், டீ கடையில் டீ குடித்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுடன் செல்பி எடுக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அவர்களை கிட்ட அழைத்து, செல்பி எடுத்துக்கொண்டார்.

மு.க. ஸ்டாலின் உறுதி
பின்னர், அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடமும் தி.மு.க-வின் சாதனைகளை எடுத்துக் கூறினார். மேலும், விரைவில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது முதலாவதாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். தொடர்ந்து விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வேன் என்றும் கூறினார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications