எம்ஜிஆர் கர்நாடகா போனது எதற்கு? அப்போ சூழலே வேற! விஜய்யே வாய் திறக்கலையே! துரைமுருகன் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: முதல்வர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை எனவும், காவிரி தொடர்பான பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் அல்லது காவிரி மேலாண்மை குழு அல்லது ஒழுங்காற்றுக் குழுவை தான் அணுக வேண்டும். நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வீணாகி விடும் என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Durai Murugan

தமிழ்நாடு முதல்வர் எதற்காக பெங்களூர் போகிறார் என்பதை இன்னும் அவர் அறிக்கையாகவோ செய்தியாகவோ வெளியிடவில்லை. ஒரு அனுமானமாக அவருடைய அமைச்சர்கள் சொல்வதைப் பார்த்து காவிரி பிரச்சனைக்காக என சொல்கிறார்கள்.

துரைமுருகன்

காவிரியில் இரண்டு பிரச்சனை உள்ளது. ஒன்று மாதாந்திர வாரியாக நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்கவில்லை. அதைக் கேட்கப் போறாரா அல்லது மேகதாது கட்ட வேண்டாம் என பேசப் போகிறாரா என தெரியவில்லை. இதில் என்ன பிரச்சனை என்றால் தண்ணி எங்களுக்கு போதவில்லை எனக்கேட்டால் சுப்ரீம் கோர்ட்டின் ஆர்டர் வீணாகப் போய்விடும். சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டு விட்டது. இதில் ஏதாவது பிரச்சனை என்றால் காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவிடம் போய் சொல்லலாம்.

விஜய் கர்நாடக பயணம்

இரண்டையும் கேட்கவில்லை என்றால் சென்ட்ரல் வாட் கமிஷனிடம் சொல்ல வேண்டும். இதை கேட்க குழுவுக்கு தான் அதிகாரம் உண்டு. நீங்க போய் கேட்டால், நாம் வாங்கிய ஆர்டர் வீணாக போய்விடும். அதனால்தான் எங்க ஆட்சி காலத்த்தில் கூட நாங்கள் போகவில்லை. ஏனென்றால் சுப்ரீம் கோர்ட் உரிமை கொடுத்து விட்டது. இவர்களிடம் போய் கெஞ்ச தேவை இல்லை. நாம் பேச வேண்டியது எல்லாம் காவேரி மேனேஜ்மென்ட் போர்ட். சென்ட்ரல் வாட் கமிஷன் தான்.

காவிரி பிரச்சனை

மேகதாவை பொருத்தவரை கபினி, கே.ஆர்.சாகர் தண்ணியை மூன்று டேம் கட்டி நிறுத்தி விட்டார்கள். மேகதாதுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் தமிழகத்திற்கு வராது ஆகவே இது ஒரு நாள், அரை நாள் பிரச்சனை அல்ல 1992 ஆம் ஆண்டில் இருந்து இருக்கின்ற பிரச்சனை. முன்னாள் இருந்தவர்கள் செய்த குளறுபடியால் தான் இப்படியாக ஆகிவிட்டதாக ஒரு அமைச்சர் சொல்கிறார்கள். நான் சட்டசபையில் இருக்கும் போது கையெடுத்து கும்பிட்டு கேட்டேன்.

மேகதாது

கர்நாடகாவில் யாராவது முன்னாள் அமைச்சர்கள் சரியாக செய்யவில்லை, முன்னாள் முதல்வர்கள் சரியாக செய்யவில்லை என சொல்கிறார்களா என்றால் கிடையாது அவர்களுடைய ஒரே நோக்கம் மேகதாது தான். அதுபோல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நீங்களா? நானா? என பேசுவதை விட காரியம் ஆக வேண்டும் இப்போதுல்ல அமைச்சர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். முதலமைச்சர் போய் வந்த பிறகு தான் இது பற்றி என்ன பேசினார், என்ன ஆகும் என தெரியும்.

முதல்வர் விஜய்

எம்ஜிஆர் போலவே முதல்வர் விஜய்யும் கர்நாடக போய் பேசுகிறார் என்கிறார்கள். எம்ஜிஆர் போனது கோர்ட்டுக்கு போகவில்லை. அப்போது நம்மிடம் நீதிமன்ற உத்தரவு இல்லை. இப்போது நம்மிடம் கோர்ட் தீர்ப்பு உள்ளது. ஆகையால் அதோடு இது பொறுந்தாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது. ஆனால் வாங்கிய கடனை என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

காவிரி விவகாரம்

பிஜேபியை திமுக நெருங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். பிஜேபி இடம் நாங்கள் நெருக்கவில்லை. காங்கிரஸை விட்டு நாங்கள் வெளியே வந்து விட்டோம். காவிரி விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளிப்பதில்லை. முதல்வரே வாயை திறப்பதில்லை. பின்னர் அமைச்சர்கள் எப்படி பேசுவார்கள். அவருக்கு காவிரி விவகாரம் தெரியுமா? தெரியாதா?" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+