தலையை அடகு வைத்தாவது வாக்குறுதி காப்பேன்... மகனை உங்களிடம் தத்து கொடுக்கிறேன்.. துரைமுருகன் உருக்கம்
வாணியம்பாடியில் மகனுக்காக பிரச்சாரம் செய்தார் துரைமுருகன்
Recommended Video

வேலூர்: "இந்த துரைமுருகன் சொன்னதை செய்வான்.. என் தலையை அடகு வைத்தாவது வாக்குறுதியை காப்பான்.. என் மகனை உங்ககிட்ட தத்து கொடுத்துவிட்டு போக வந்திருக்கிறேன்.. அவரை எம்பி ஆக்குங்கள்" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் உருக்கமாக பேசி உள்ளார்.
வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேட்பாளராக களமிறங்க போகிறார். இதற்காக துரைமுருகன் வாணியம்பாடி கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசியபோது சொன்னதாவது:
"வாணியம்பாடியில் தான் நான் படித்தேன். மேடைப் பேச்சு இங்குதான் எனக்கு தொடங்கியது, 1959லிருந்து நான் எத்தனையோ கூட்டங்களில் பேசி இருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் போய் கட்சிக்காரர்களுக்காக வாக்கு கேட்டு உள்ளேன். இலக்கியக் கூட்டங்கள் பேசியிருக்கிறேன்.

மகனுக்காக...
திருமணங்களில் பேசி இருக்கிறேன். கல்லூரி மேடைதோறும் பேசி இருக்கிறேன் இதுவரையில் யார் யார் கழக உடன்பிறப்புகள் நின்றார்களோ தேர்தலில் அவர்களுக்காக போய் பேசி இருக்கிறேன் இப்போதுதான் முதல் முறையாக எனக்கு பிறந்த மகனுக்காக பேச வந்திருக்கிறேன்

பாசம்
என்னை நம்புங்கள்.. என் அரசியலை நம்புங்கள்.. கட்சி மாறாத என் கொள்கையை நம்புங்கள்.. கலைஞர் இடத்திலும் அண்ணா இடத்திலும் பெரியார் இடத்திலும் பழகிய பாசத்தை நம்புங்கள்.. அந்த நம்பிக்கைக்கு ஓட்டு போடுங்கள்.. உங்களுக்கு நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்காமல் நல்வழிப்படுத்தி உங்கள் பிள்ளையாக மாற்றி காட்டுவேன். இதுதான் இந்த கூட்டத்திற்கு நான் கொடுக்கும் சத்தியம் இதுதான்! இதுதான் நான் உங்களிடத்தில் கைநீட்டி கேட்கின்ற யாசகம்! அவரை நீங்கள் எம்பி ஆக்குங்கள்!

கதிர் ஆனந்த்
குடியாத்தத்தில் மேற்கு வாணியம்பாடி தொகுதி எல்லை வரையில் ஒரு தொழிலும் இல்லாத இந்த வளர்ந்த பகுதியில் என் மகன் கதிர் ஆனந்த் உங்களால் எம்பி ஆக்கப்பட்டு, மாபெரும் தொழிற்பேட்டையை இந்த பகுதியில் அமைத்து காட்டுவான். இந்த துரைமுருகன் சொன்னதை எதையும் மீறியதில்லை. சொன்னதை செய்கிறவன். மகன் கதிர் ஆனந்த் செய்யாவிட்டாலும் என் தலையை அடகு வைத்தாவது இந்த வாக்குறுதியை துரைமுருகன் காப்பான்.

தத்து தருகிறேன்
உங்களிடத்தில் கேட்டுக்கொள்வதெல்லாம் நான் அவருக்கு ஜாமீன் போட வந்துள்ளேன். உங்களிடத்தில் உறுதி கொடுக்கிறேன். என் மகன் உங்களுக்கு உண்மையான ஊழியராய் இருப்பான். இது சத்தியம் என்று சொல்வதற்கு வந்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால் இந்த பிள்ளையை உங்கள் பிள்ளையாக கையெழுத்து போட்டுவிட்டு தத்து கொடுத்து விட்டு போகிறேன்" என்று உருக்கமாக பேசினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications