சிபிஎஸ்இ +2 ரிசல்ட்.. அடித்து நொறுக்கிய வேலூர் மாவட்ட மாணவி! மார்க்கை பாருங்க.. இதுதான் தமிழ்நாடு
வேலூர்: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று தேர்வு வெளியாகியுள்ளன. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த +2 மாணவி மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மாநில பாடத்திட்டத்தின் பயின்ற +2 மாணவர்களின் தேர்வு முடிவுகளில் வேலூர் மாவட்டம்தான் கடைசி இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த இரண்டு விஷயங்களையும் குறிப்பிட்டு சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கிய சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதியன்று முடிந்தது. இந்த தேர்வை 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். அதேபோல 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதியன்று தொடங்கி மார்ச் 21ம் தேதியன்று முடிவடைந்தது. இதனை 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இவ்வாறு இருக்கையில், இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம். கடந்த ஆண்டு 94.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வழக்கம்போல சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வெழுதிய மொத்த மாணவிகளில் 94.25% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 92.27% மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் தேர்வில் பெற்றுள்ளனர்.
எனினும் 12-ம் வகுப்பை போலவே, 10-ம் வகுப்பு தேர்விலும், யார் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க யார் முதலிடம் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என தெரிகிறது. ஆனாலும், பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.. இந்த தேர்வில் 99.91% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. 76.90% தேர்ச்சியுடன் கௌஹாத்தி மண்டலம் கடைசி இடத்தில் உள்ளது.
+2 மாவணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இது ஒட்டுமொத்த தேசிய சராசரியை விட அதிகமாகும். தேசிய அளவில் மொத்தமா 87.33 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளார். இது கடந்த ஆண்டை விட 5.38 சதவிகிதம் குறைவாகும். இந்த தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் 99.14 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பை போல 12ம் வகுப்பிலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியைடந்துள்ளனர். அதேபோல இதில் 33 சதவிகிதத்திற்கும் குறைவாக மார்க் எடுத்து தேர்ச்சிபெற தவறியிருந்தால் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்தப்படும் கம்பார்ட்மென்ட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடையலாம். இன்று வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய என்கிற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். முடிவுகள் IVRS மற்றும் SMS மூலமாகவும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் வேலூர் மாணவி ரேஹா சுந்தரேசன் 500க்கு 497 எடுத்து மாநில அளவில் சாதனை படைத்திருக்கிறார். வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று வந்த இந்த மாணிவி மாநில அளவில் முதல் மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார். அவருக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சமீபத்தில்தான் மாநில பாட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழக அளவில் விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தது.
கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்திருந்தது. வழக்கமாக வேலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திலிருந்து தனியார் பள்ளியில் பயின்ற மாணவி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை மேலும் கூர்மையடைய செய்துள்ளது என கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். இங்கு மாணவர்கள் பிரச்னை இல்லை கல்வி பயிற்றுவிக்கும் முறைதான் பிரச்னை என்பதை இந்த சிபிஎஸ்இ ரிசல்ட் தெளிவுப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications