அட்ராசக்க.. அதானியின் பக்கா மூவ்..! வேலூரே வெளிச்சமாகப் போகுது.. இத்தனை கோடி முதலீடா? முழு விவரம்
வேலூர்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபருமான அதானியின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்கிறது. வேலூரில் நீர் தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அதானி நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிதிபரும், உலக சூப்பர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கௌதம் அதானி பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறார்.

குறிப்பாக விமான நிலையம், ரீடைல், எண்ணெய் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் அதானி நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடு செய்திருக்கிறது.
கௌதம் அதானி: பணக்கார பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருந்த அவர் ஹிட்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக சரிவை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென சரிந்ததால் இவருடைய சொத்து மதிப்பும் அகல பாதாளத்தை நோக்கிச் சென்றது. இதனால் உலகின் சூப்பர் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மீண்டும் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: இதையடுத்து மீண்டும் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் கௌதம் அதானி. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் தயாரிக்கும் பிளான்டுகளை அதானி நிறுவனம் அமைத்து வருகிறது. சூரிய மின்சக்தி, நீர் மின்சக்தி, திட்டங்களுக்கு மத்திய அரசு நிறைய ஆதரவை அளித்து வருகிறது. காரணம் நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மூலம் நாட்டில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் நிலையில் பசுமை எரி சக்தியை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலீடு: இதையடுத்து தொழில் துறையினர் சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் மீண்டும் தனது மின் சக்தி திட்டத்தை தொடங்க இருக்கிறது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம். ஏற்கனவே இந்த நிறுவன தமிழகத்தில் கால்பதித்திருக்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி என்ற சூரிய மின் சக்தி நிறுவனத்தின் நிலையம் அமைந்திருக்கிறது. சுமார் 2500 பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர் மின்சக்தி உற்பத்தி நிலையத்தின் மூலம் 648 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மீண்டும் முதலீடு: இந்த மின்சாரத்தை தமிழக மின்சார வாரியமே கொள்முதல் செய்கிறது இதற்காக மின்வாரியத்துடன் 25 ஆண்டுகள் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது இந்த மின் நிலையத்தில் தினமும் 30 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதானியின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் முதலீடு செய்கிறது. வேலூரில் நீர் தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அதான நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.
முதலீடாக மாறிய ஒப்பந்தம்: கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வரும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 24,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நீர் தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியது.
தற்போது அதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தற்போது முதலீடாக மாறி உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
-
ரூ.1.53 லட்சம் கோடி முதலீடு.. இந்திய நிறுவனங்களில் புதிய சாதனை படைத்த அதானி குழுமம்! -
அமெரிக்க சட்ட சவால்களை கடந்துவிட்டோம்.. ஏஐ-யில்தான் இனி கவனம்! கவுதம் அதானி நம்பிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications