காட்பாடியில் ஓட்டல் நடத்தும் உமா.. ‘டபுள் மடங்கு’ஆசையால் மயங்கிய மகாலட்சுமி.. வேலூரில் ட்விஸ்ட்
வேலூர்: இரட்டிப்பு பண ஆசை யாரைத்தான் விட்டது. சதுரங்க வேட்டை பட பாணியில், ஆசையை தூண்டி பணத்தை பறிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். மக்களின் ஆசையை தூண்டி வலையில் வீழ்த்தி உள்ளது ஒரு தம்பதி. காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.55.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மக்களுக்கு பணத்தின் மீது உள்ள பேராசையையும், அந்த ஆசையை வைத்தே வீழ்த்துவோர் குறித்தும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. குறிப்பாக சொல்வது என்றால் சதுரங்க வேட்டை படத்தை கூறலாம். இந்த படத்தில் தான் எப்படி எல்லாம் ஒருவரை ஏமாற்றி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள்.

தங்க நகை மீது உள்ள மோகத்தில் மக்கள், எப்படி இரவே ஒரு தங்க நகைக்கடைக்கு சென்று ஏமாறுவார்கள் என்பதை காட்டியிருப்பார்கள். இதேபோல் எம்எல்எம் எனப்படும் ஆட்களை சேர்த்தால் காசு பாணி முறையையும் தோலுரித்திருப்பார்கள். இது இல்லாமல் இரட்டிப்பு பணம், இரிடியம் மோசடி என எல்லாவற்றையும் காட்டியிருப்பார்கள்.இந்த படத்தை தமிழ்நாட்டில் பார்க்காதவர்கள் மிக குறைவு. ஆனாலும் இன்றுவரை ஆசையை தூண்டிவிட்டு ஏமாற்றுவது குறையவே இல்லை..
சிலர் 10 வட்டி தருகிறேன், ஐந்து வட்டி தருகிறேன் என்று கூறி ஊர் முழுவதும் பணம் வாங்குகிறார்கள். மாதம் மாதம் சரியாக வட்டிக்கட்டுவது போல் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். எல்லாரும் நம்பி பணத்தை கொடுத்த பின்னர், ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியூர்களுக்கு தப்பி விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் பணத்தை வசூலிக்க முடியாத நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இதேபோல் இரட்டிப்பு பணம் தருவதாகவும் மோசடி செய்கிறார்கள். அப்படித்தான் வேலூரில் இரட்டிப்பு பண ஆசை காட்டி மோசடி செய்திருக்கிறது ஒரு தம்பதி.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் துணி வியாபாரமும், மாதச்சீட்டும் நடத்தி வருகிறார். இவரும் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்த 39 வயதாகும் உமாவும் பழகி வந்தனர். உமா மற்றும் அவரது கணவர் பாலுவும் (41) காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.
இந்தநிலையில் காட்பாடி ரயில் நிலைய ஒப்பந்தம் எடுக்க உள்ளதாகவும், பெங்களூரில் புதிய ஓட்டல் ஆரம்பிக்க உள்ளதாகவும் மகாலட்சுமியிடம் தம்பதி கூறியுள்ளனர். மேலும் அதற்கு பணம் தேவைப்படுவதால், கொடுக்கும் பணத்தை 2 மடங்காக திருப்பி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய மகாலட்சுமி ரூ.55 லட்சத்து 55 ஆயிரத்தை கொடுத்தாராம்.
ஆனால் பணத்தை திருப்பி தராமல் உமா பாலு தம்பதி ஏமாற்றி வந்துள்ளார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா, பாலு ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications