அப்பல்லோவில் 4 மாதம்! வேலூர் சிஎம்சியில் 100 நாள்! மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 100 நாட்களுக்கு மேல் அவர் சிகிச்சை பெறும் அளவுக்கு அவருடைய உடல்நிலைக்கு என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. மதுரை என்றாலே அது அழகிரிதான். அந்த அளவுக்கு மதுரையை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் திமுகவில் யாருக்கு முக்கியத்துவம் என்ற பிரச்சினையில் ஏற்பட்ட மோதலால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

m k alagiri durai dhayanidhi vellore

இதையடுத்து அவரை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் எத்தனையோ முயற்சிகளை எடுக்க போதிலும் அது பலனளிக்கவில்லை. இந்த நிலையில் முதல்வராக ஸ்டாலின் தேர்வான போது அழகிரி அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்னார். அது போல் ஸ்டாலினும் தனது பதவியேற்பு விழாவுக்கு மு.க.அழகிரி குடும்பத்தினரை அழைத்த நிலையில் மகன் துரையும் மகள் கயல்விழியும் வந்திருந்தனர்.

அவர்களை உதயநிதியும் துர்காவும் வாரி அணைத்துக் கொண்டனர். இந்த நிலையில் அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று மதுரைக்கு சென்ற போது தனது பெரியப்பா, பெரியம்மாவை சந்தித்து ஆசி வாங்கினார். இந்த நிலையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் திரைத் துறையில் பல படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் அவர் கால் தவறி விழுந்த போது தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கேயே 4 மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் 4 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது போல் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அவரை முதல்வர் ஸ்டாலின் இருமுறை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+