Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலை சுற்ற வைத்த ஜெகத்ரட்சகன் சொத்து கணக்கு.. கடன் மட்டும் ரூ.649 கோடி.. வெளியான முழு தகவல்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த முறை தனக்கு ரூ.115 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியிருந்தார். தற்போது 53 கோடி அளவில் சொத்து இருப்பதாகவும். 649 கோடி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

அரக்கோணம் லோக்சபா தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேட்பாளரான ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். விஐபி தொகுதியான இந்த தொகுதியில் கடந்த முறை ஜெகத்ரட்சகன் தான் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் கண்டிப்பாக தங்களது சொத்து மற்றும் வருமானம் குறித்த முழு விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.

How much is jagathrakshakan s property worth The loan alone is Rs 649 crores Not even owning a car

அந்த வகையில் கடந்த 2019 தேர்தலின் போது, தனக்கு ரூ.115 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக கூறியிருந்தார். இதேபோல் மனைவி அனுசுயா பெயரில் ரூ.43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631 மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக 2019 தேர்தலின் போது குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெகத்ரட்சகன் மனைவியின் பெயரில், 16 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரத்து 972 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த முறை தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஜெகத்ரட்சகன் தனக்கு 645 கோடி கடன் இருப்பதாக கூறியுள்ளார். வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் தனிநபரகளிடம் அந்த கடனை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் வருமானவரி மேல்முறையீடு தொடர்பாக 7,26,70,968 ரூபாய் தொகையை கட்டாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். 2024ல் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பை பார்த்தால், மொத்தம் 53,45,87,828 ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். தன் பெயரிலும், தன் மனைவி அனுஷியா பெயரிலும் சேர்த்து 'அசையும்’ சொத்துகள் 14,37,09,982 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் பட்டியலிட்டிருக்கிறார் ஜெகத்ரட்சகன். அதேபோல, 'அசையா’ சொத்துகள் இருவரின் பெயர்களிலும் சேர்த்து 39,08,77,846 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்

வருமான வரி கணக்கை பொறுத்தரை 2018-19ல் சுமார் 28 லட்சம் வருமானம் வந்ததாகவும், 2019-2020ல் சுமார் 60 லட்சம் வருமானம் வந்தாகவும், 2020-21ல் 43 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாகவும், 2021-22ல் 42லட்சமும், வருமானம் வந்தாக கணக்கு காண்பித்துள்ளார். கடந்த 2022-23ல் போது, தனது ஆண்டு வருமானம் 45,62,880 ரூபாய் எனக் காண்பித்திருக்கிறார்.

தனது மனைவி அனுசுயா பெயரில் கடைசியாக 2021-ம் ஆண்டு வருமானவரி கணக்குத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, மனைவிக்கு ஆண்டு வருமானம் 40,13,900 ரூபாய் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா கடந்த 2020 டிசம்பர் 15-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.

ஜெகத்ரட்சகன் மனைவிக்கு சென்னையில் தி.நகர், மகாலிங்கபுரம், வண்டலூர் பகுதிகளில் மனைவி பெயரில் வணிக வளாகங்கள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்து. இருக்கின்றன. சென்னை அடையாறு, குரோம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், சொந்தக் கிராமமான கண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலும் குடியிருப்பு வளாகங்கள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்துக்கு அருகேயுள்ள கலிங்கமலை கிராமத்திலும், திண்டிவனத்திலும் விவசாய நிலங்களும், மனைகளும் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். கையிருப்பாக 4,21,200 ரூபாய் மட்டுமே ரொக்கமாக இருப்பதாக கூறியுள்ளார்.கையிருப்பமாக 4,21,200 ரூபாய் மட்டுமே ரொக்கமாக இருப்பதாக கூறியுள்ளார். தன் சம்பந்தப்பட்ட 16 வங்கி கணக்குகளில் 1,32,82,169 ரூபாய் பணத்தை 'வைப்பு’ தொகையாக வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

ஜே.ஆர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஜெகத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சுவாமிக்கண்ணு ஜெகத் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட், ஏ.ஜே.ஆர் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட், அக்கார்டு சர்வதேச பள்ளி, ஜெகத் எண்டர்பிரைசஸ், ரெட்ஜெம் மருத்துவமனை போன்றவற்றில் முதலீடு செய்துள்ளார். ஜே.ஆர்.என் ரிசார்ட்ஸ் அண்ட் ஹோட்டல்ஸ், ராமிஃபை சொல்யூஷன்ஸ், ஜே.ஆர் கோல்டு கிங்டம், அக்கார்ட்டு டிஃபென்ஸ் சிஸ்டம், ஸ்ரீராயல் ப்ளூ மவுண்டன் ஹாஸ்பிட்டல், எஸ்.எம்.டி அனுசுயா ஹாஸ்பிட்டல் 'அக்கார்டு பிளாட்டினம் டயர்ஸ், ஜே.ஆர் தங்க மாளிகை, அக்கார்டு ஆர்னமென்ட், ரிஹா ஓஷன் ரிசார்ட்ஸ், ஆகிய நிறுவனங்களில் பங்குதார்களில் ஒருவராக இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் மனைவி பெயரில் உள்ள இரண்டு கார்களை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+