அரசு கொடுக்கும் 1000 ரூபாய்.. மாணவிகள் எப்படி செலவு பண்ணனும்.. துரைமுருகன் பேச்சால் கடும் சர்ச்சை
வேலூர்: அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை கல்லூரி மாணவிகள் எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பதை அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அமைச்சர் துரைமுருகன் பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ என்று கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது.
என்ன பேசினார் என்பதை இப்போது பார்ப்போம். அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவன்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்.
உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்..
நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" இவ்வாறு துரைமுருகன் பேசும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்த எஸ்ஆர் சேகர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications