மா மகசூலை பாதிக்கும் பூச்சிகளை அழிப்பது எப்படி? விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை விழிப்புணர்வு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, கொத்தூர் கிராமத்தில் தோட்டக் கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிகளினால் மா (மாங்காய்) மகசூல் அழிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கொத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் விவசாய நிலத்தில் விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு பூச்சிகளில் இருந்து மா மகசூல் பெருவது எப்படி என்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

vellore peranampet

இந்த நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தோட்டக்கலை இயக்குனர் கிரித்திகா தேவி தலைமையிலும் தோட்டக் கலை அலுவலர் சுபாஷ் சந்திர போஸ், பூச்சியியல் இணை பேராசிரியர் டாக்டர் திலகம், நோயியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் சித்ரா, ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதில் பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் விவசாயப் பயிர்களை பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து எப்படி காக்க வேண்டும் என்றும் பயிர்கள் மற்றும் மா மரங்கள் உள்ளிட்ட மரங்களை எப்படி காக்க வேண்டும் என்றும் அதற்கு என்ன மாதிரியான உரங்களையும் மற்றும் பூச்சி தெளிப்பான்களையும் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கினர்.

இதையடுத்து தேனீக்களை எப்படி சேகரிக்க வேண்டும். அதனால் தேனை எப்படி உருவாக்க முடியும்? காளான் வளர்ப்பு குறித்தும் பேசினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+