நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும்.. ஸ்டாலின் அதிரடி சவால்!
நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்: நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் பிரச்சார களம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், தமிழக அரசு அறிவித்த எந்த திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் அறிவித்த திட்டங்களை சரியாக செய்யவில்லை என்று புகார் வந்தது. இதனால் அதற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி அப்படியே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மாநில அரசின் திட்டங்களும் இப்படித்தான் முடங்கி உள்ளது.

யார் மகன்
நான் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச கூடிய ஆள் கிடையாது. நான் கலைஞரின் மகன். எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன். ஒவ்வொரு துறையிலும் 1000 கோடி ரூபாய் என்று பல்லாயிரம் கோடி ரூபாயை அதிமுக அரசு இப்படி வீணடித்து இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவது திமுக.

பெரிய வெற்றி
38 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் நமது கட்சியே வெற்றி பெற்றது. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இதுதான் எடுத்துக்காட்டு. ஐந்தரை லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுக தான். இந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி நாம்தான்.

அழிக்கலாம்
விவசாயிகளை எப்படி எல்லாம் அழிக்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க ஆசைப்படும் அதிமுக அரசு எப்படி விவசாயிகளை காக்கும். எப்படி விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வரும்.

ஒரே நிமிடம்
நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும். இப்போது கூட ஆட்சியைய் கவிழ்த்து என்னால் பதவி ஏற்க முடியும். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சியை அமைக்க எண்ணமில்லை. அதை நான் செய்ய மாட்டேன். தானாக ஆட்சி கவிழும் பாருங்கள், என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேலூரில் பேசியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications