துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு!
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மூன்று நாட்களாக நடந்த ரெய்டு நேற்று முடிவிற்கு வந்தது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.

முதல்நாள் சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சோதனை நடந்தது.
வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 11 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாட்களாக நடந்த சோதனை நேற்று முடிந்தது.
இதையடுத்து இதுகுறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. வருமானவரி சோதனை தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு உள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் பற்றிய விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையை வருமான வரித்துறை அளித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை ஆய்வு செய்யும். இந்த அறிக்கையை அடுத்து வேலூரில் தேர்தலை நிறுத்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் ஆணையம் இதில் அடுத்து என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
