ஜோஸ் ஆலூக்காஸ் நகைக்கடை கொள்ளை: சிக்கிய சிங்க முகமூடி கொள்ளையன்! சுடுகாட்டில் பதுக்கிய நகை மீட்பு
வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் பிரபலமான தனியார் நகை கடை. தரைதளம் உட்பட 5 அடுக்குகள் கொண்ட நகை கடையில் தரை தளத்தில் வைரம் மற்றும் தங்க நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று இரவு நகை கடையை பூட்டிவிட்டு சென்ற ஊழியர்கள் இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. நகை கொள்ளை பற்றி வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கடைக்குள் புகுந்த கொள்ளையன்
கடையின் பின்பக்கம் உள்ள காற்று வெளியேறும் வெண்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தரைதளத்தின் உள்ளே புகுந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒல்லியான முகமூடி அணிந்த உருவம் ஒன்று கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடிப்பது பதிவாகியிருந்தது.

சிங்கமுகமூடி கொள்ளையன்
கொள்ளை போன நகை கடைக்கு அருகில் தடையங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டன. கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் ஒரு தலை விக் கண்டெடுக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் வேலூர் சரக டிஐஜி ஏஜி பாபு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீஸ் ஆய்வு
கொள்ளை சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும், சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்களை வைத்து தேடி வந்தனர். நகைக்கடையில் சேகரிக்கப்பட்ட கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் பழைய குற்றவாளிகளை ஆராய்ந்து வந்தனர்.மேலும் கடைக்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்தனர்.

சிங்க முகமூடி கொள்ளையன்
அப்போது, மெலிதான உடல் கொண்ட நபர் ஒருவர் தோளில் பையை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையை போலீசார் ஆராய்ந்தனர். முகமூடி அணிந்த நபரின் உடல் அமைப்பு அணைக்கட்டு, பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரின் உடல் அமைப்பு மற்றும் கைரேகைகளுடன் ஓரளவு ஒத்துப்போனது.

நகைகளைக் பதுக்கிய கொள்ளையன்
டீக்காராமனை கைதுசெய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நகைகள் திருடப்பட்ட கடைக்கு டிக்காராமை அழைத்துச்சென்ற போலீசார், சிங்க முகமூடியையும் அணிவித்து ஆராய்ந்தனர். டீக்காராமனின் தாய், மனைவி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடித்த நகைகளை உருக்கி மயானத்தில் புதைத்து வைத்திருப்பதாக கொள்ளையன் கூறவே அந்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications