எல்லாம் அங்க போய் கும்பிடுறாங்க!.. ஆமா முதல்வர் ஸ்டாலினா? இல்லை உதயநிதியா?.. கே பி முனுசாமி பொளேர்!
காட்பாடி: உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு மேடை நீட்டை ரத்து செய்வதாக கூறினார். ஆனால் செய்யவில்லை - அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்திக்கிறார்களோ இல்லையோ உதயநிதியை சந்தித்து வணக்கம் சொல்கிறார்கள் என குடியாத்தத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு பிரச்சினை காரணமாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகிகள் ஜனார்த்தனன், அமர்நாத், ஆனந்தன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் கிளை சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச் சாலையில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திப்பதற்காக குடியாத்தம் வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
அப்போது அவர் கூறுகையில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதாலேயே அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் இதுபோன்ற திசைதிருப்பும் செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜனநாயக முறைப்படி
வரும் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே இவ்வளவு அராஜகம் செய்யும் ஆளுங்கட்சியினர் உள்ளாட்சி தேர்தலின் போதும் வாக்கு எண்ணிக்கையின் போது என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.

பாதுகாப்பு இருக்குமா
மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதும் அச்சமாக உள்ளது. நீட் குறித்து பொய்யான வாக்குறுதியை திமுக அளித்தது. மேடைக்கு மேடை உதயநிதி ஸ்டாலின் நீட்டை ரத்து செய்வோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

அமைச்சர்கள்
அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உதயநிதியை சந்திக்கின்றனர். ஸ்டாலின் முதல்வரா இல்லை உதயநிதி முதல்வரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என கே பி முனுசாமி விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தமிழக பட்ஜெட் தாக்கலின் போது பல எம்எல்ஏக்கள் எழுந்து வந்து உதயநிதி ஸ்டாலினிடம் வணக்கம் சொல்லிவிட்டு தங்கள் இருக்கைக்கு சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications