நானெல்லாம் உதைக்கிற மாட்டிலேயே வேகமாக பால் கறப்பவன்.. இது யாராலும் முடியாது.. அமைச்சர் எ.வ.வேலு கலகல
திருப்பத்தூர்: நானெல்லாம் உதைக்கிற மாட்டிலேயே வேகமாக பால் கறப்பவன். என்னை போல் வேகமாக பால் கறக்க யாராலும் முடியாது என அமைச்சர் எ.வ.வேலு கூறிய போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழைய கூட்ட அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மற்றும் இயக்குநர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ .வேலு கலந்துகொண்டார்.
இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஒன்றிய தலைவராக திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவராக தேன்மொழி மற்றும் 15 நிர்வாக குழு இயக்குனர்கள் பதவிக்குரிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சர் எ.வ.வேலு
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு , நான் ஒரு விவசாயி. என்னை போல் யாராலும் வேகமாக பால் கறக்க முடியாது. நானெல்லாம் உதைக்கிற மாட்டிலேயே பால் கறப்பவன் என கூறிய போது அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. மேலும் பல பால் கூட்டுறவு உற்பத்தி சங்கங்கள் உற்பத்தி குறைவின் காரணமாக சங்க பதிவுகளை இழந்து போய்விட்டன.

சங்கங்கள்
அதுபோன்ற சங்கங்களை கண்டறிந்து உற்பத்தி குறைந்ததற்கான காரணங்களை தேடி பிடித்து மீண்டும் சங்கத்தை புதுப்பிக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தி சங்கங்களை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு புதிய நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

யார் பங்கேற்பு
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழாவில் திருப்பத்தூர் கிளை, நகர, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் புதியதாக பதவி ஏற்று கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை கூறிச் சென்றனர். வழக்கமாக அமைச்சர் துரைமுருகன்தான் நகைச்சுவையாக பேசி சுற்றியிருப்போரை கலகலத்து போக செய்வார்.

அமைச்சர் எ.வ.வேலு
அந்த வகையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலுவும் நகைச்சுவையாக பேசியுள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர தங்கள் உரை யாருக்கும் போர் அடிக்காத வகையில் இதுபோன்ற நகைச்சுவை பாணியை கடைபிடிக்கிறார்கள் என்றே சொல்லலாம். எது எப்படி இருந்தாலும் ஒருவரை சிரிக்க வைப்பது என்பது புண்ணியமான காரியம் என திமுக தொண்டர்கள் நெகிழ்ச்சியடைகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications