வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியில் வெற்றி பெற அதிமுக தந்தது நெல்லை அல்வாவா அல்லது டெல்லி அல்வாவா? .. ஸ்டாலின் தாக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்கு சேகரிப்பில் மு.க ஸ்டாலின்... செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்....

    வேலூர்: தேனியில் வெற்றி பெற அதிமுக தந்தது எந்த அல்வா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகமும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் கதிர்ஆனந்தை ஆதரித்து நேற்று முன் தினம் முதல் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அதுபோல் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரசாரம் செய்து வருகிறார்.

    திடீர் திருப்பம்.. உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய குற்றவாளி கைது?.. கொலையாளி சைக்கோ என தகவல் திடீர் திருப்பம்.. உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய குற்றவாளி கைது?.. கொலையாளி சைக்கோ என தகவல்

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இதில் கேவி குப்பத்தில் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பேசியபோது, முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள். அவர் ஒரு வாரிசு தானே? திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    ஸ்டாலினின் ராசி அப்படி. திமுக ஆட்சியை பிடிக்கும் என ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் நேற்றைய தினம் வெள்ளக்குட்டையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ஐஎஸ்ஐ முத்திரை

    ஐஎஸ்ஐ முத்திரை

    அவர் பேசுகையில், தேனியில் வெற்றி பெற அதிமுக தந்தது திருநெல்வேலி அல்வாவா? அல்லது டெல்லி அல்வாவா?. அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி என்கிறார்கள். ஊழலில், முறைகேட்டில் அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை பதித்த கட்சியா?

    வாரிசு அரசியல்

    வாரிசு அரசியல்

    ஏதோ திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வாரிசு வேட்பாளர் என கூறுகிறார்கள். நான் கேட்கிறேன், ஓபி ரவீந்திரநாத் குமார், ஜெயவர்த்தன், ராஜன் சத்யா ஆகியோர் யார்? இவர்கள் ஓபிஎஸ் மகன், ஜெயக்குமார் மகன், ராஜன் செல்லப்பா மகன் ஆவார்கள். இது வாரிசு அரசியல் இல்லையா?

    மேம்பால பணிகள்

    மேம்பால பணிகள்

    திமுக ஆட்சி அமையும் என்ற எனது கனவு நனவாகப் போகிறது. ஆட்சியை தக்க வைக்க போராடும் அதிமுக அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. வேலூரில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்சாலையை கதிர் ஆனந்த் கொண்டு வருவார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியூ டவுன் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK President MK Stalin in election campaign asks what Alwa was given to people in Theni MP constituency?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X