அடக்க முடியாமல் அழுத ஸ்டாலின்.. சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.. காத்தவராயன் இறுதிச் சடங்கில்
வேலூர்: திமுக எம்எல்ஏ காத்தவராயன், இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற அந்த கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
குடியாத்தம், சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன்.
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காத்தவராயன் நேற்று மறைந்தார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி சடங்கு பேரணாம்பட்டில், இன்று நடைபெற்றது.

காத்தவராயன் இறுதிச் சடங்கு
இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு சென்றிருந்தனர். அப்போது ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த, காத்தவராயன் உடலைப் பார்த்து மிகவும் துக்கத்தோடு காணப்பட்டார் ஸ்டாலின். அவரது முகமே வாடிப்போய்விட்டது. விம்மிப்போய் இருந்தார்.

ஸ்டாலின் அழுகை
இதன் பிறகு, ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் சற்று தள்ளி ஓரிடத்தில் அமர்ந்து இருந்தனர். அப்போது, எதையோ யோசித்தவர் போல காணப்பட்ட ஸ்டாலின், துக்கம் தாங்காமல் கண்ணீர் சிந்தி அழுதார். இருப்பினும், கண்ணீரை தனது கைகளால் துடைத்துக் கொண்டார். இந்த காட்சி, அங்கிருந்த ஊடகத்தினரின் கேமராக்களில் தப்பவில்லை. காத்தவராயன் மற்றும் அதற்கு முந்தைய நாளில் கே.பி.பி.சாமி என இரு எம்எல்ஏக்களை 2 நாட்களில் இழந்திருந்தது திமுக. அந்த சோகம் ஸ்டாலினை ரொம்பவே வாட்டியுள்ளது போல.

சோகம்
இதனிடையே, ஸ்டாலின் துக்கம் தாங்காமல் அழுததைப் பார்த்த திமுகவினரும் சோகத்தில் அழுது விட்டனர். இதனால் அந்த இடமே சோகத்தில் மூழ்கியது. முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைவின்போது இப்படித்தான் ஸ்டாலின் கதறி கதறி அழுதார். அந்த காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைப்பதாக இருந்தது.

உணர்ச்சி
சொந்த தந்தை என்பதால் ஸ்டாலின் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு விட்டார் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால், இப்போது தனது கட்சியை சேர்ந்த, ஒரு எம்எல்ஏவின் மறைவுக்கும் இவ்வாறு ஸ்டாலின் அழுதுள்ளார். ஸ்டாலினுக்கு, இயல்பாகவே இரக்க குணம் அதிகம் என்றும், அது தான் இதுபோன்ற துக்கமான சமயங்களில் அவரையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது என்றும் கூறுகிறார்கள் அந்த கட்சியினர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications