Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை தமிழர்களுக்கு ரூ 80 கோடியில் வீடுகள்.. சாவியை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ 80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

MK Stalin will handover keys of free houses for Srilankan tamils

ரூ 142.16 கோடியில் 3,510 வீடுகள் கட்டும்பணி தொடங்கப்டப்டது. தற்போது 13 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளின் திறப்பு விழா வேலூரில் இன்று நடைபெறுகிறது.

வேலூரைஅடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீடுகளை பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார். காணொலி காட்சி வாயிலாகவும் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் முகாம்களில் வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரூ79.90 கோடியில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ 11 கோடியில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்கிறார். இந்த விழாவை முடித்துக் கொண்டு இன்று இரவே ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+