அழுத குழந்தை.. ஆத்திரமடைந்த பவித்ரா.. துப்பட்டாவால் வாயை பொத்தி அழுத்தி.. பரிதாப சம்பவம்!
அழுத குழந்தையை துப்பட்டாவால் அமுக்கி கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்
Recommended Video
வேலூர்: குழந்தை அழுதுட்டே இருக்கவும் எரிச்சல் ஆகிவிட்டதாம் பவித்ராவுக்கு.. அதனால் துப்பட்டாவில் குழந்தையின் வாயை பொத்தி அழுகையை நிறுத்தி உள்ளார்.. கடைசியில் குழந்தையின் மூச்சே நின்றுவிட்டது!
வாலாஜாபேட்டை அடுத்த திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அம்மு என்கிற பவித்ரா. 22 வயதாகிறது.. கவுரி சங்கருடன் 4 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது.

ரம்யா என்ற 3 வயது குழந்தையும், மௌலிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் பவித்ரா. காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
ஆனால் 2 நாளாக அவர் வேலைக்கு போகாமல் வீட்டில்தான் இருந்திருக்கிறார். அந்நிலையில் நேற்றிரவு குழந்தை மௌலிகா அழுது கொண்டே இருந்தாள். அதனை சமாதானம் செய்து பார்த்தும் முடியவில்லை.. இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த பவித்ரா, துப்பட்டாவில் குழந்தையின் வாயை அமுக்கி உள்ளார்.
துப்பட்டா துணி வாயில் சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அப்படியே மயங்கி விழுந்துவிட்டது. இதை பார்த்து பயந்துபோன பவித்ரா, குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடினார். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். "குழந்தை அழுதது எரிச்சலா இருக்கவேதான் வாயை பொத்தினேன், ஆனால் இப்படி ஆயிரும் என்று எனக்கு தெரியாது" என்று போலீசில் கண்ணீருடன் சொன்னர் பவித்ரா. குழந்தையின் உடலை கைப்பற்றியதுடன், பவித்ராவையும் கைது செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications