காவல் துறை அதிகாரியான தமிழக ஆளுநரிடம் நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?.. நளினி கேள்வி
வேலூர்: சிறைச்சாலை ஒரு நரகம், சாக்கடை, சுடுகாடு என்று நான் நினைத்தேன். உடுத்த சரியான ஆடை கூட கிடையாது என நளினி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வேலூர் சிறைத் துறைக்கு கிடைக்க பெற்றதை அடுத்து நளினி நேற்றைய தினம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வேலூர் சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

32 ஆண்டுகள்
அப்போது அவர் கூறுகையில் சிறையிலேயே 32 ஆண்டுகள் சென்றுவிட்டன. இனி என்ன சந்தோஷம் இருக்க போகிறது. என்னுடைய விடுதலைக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி. நான் எந்த வழக்கறிஞருக்கும் இதுவரை பணம் கொடுத்தது கிடையாது.

மகளுக்கு மகிழ்ச்சி
நான் விடுதலையான நிலையில் 32 ஆண்டுகள் என்னை பிரிந்திருந்த எனது மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அம்மா நீ இனி உன் வாழ்க்கையை வாழ வேண்டிய தருணம் இது" என என்னிடம் என் மகள் சொன்னாள். நான் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என என் தலையில் எழுதியிருந்தது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்?

ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காவல் துறையில் இருந்தவர். ராஜீவ் காந்தி மரணமடைந்த போது காவல் துறையை சேர்ந்த 7 பேர் இறந்தனர். அப்படியிருக்கும் போது அவர் எப்படி எனக்கு விடுதலை தருவார் என எதிர்பார்க்க முடியும். நான் 32 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம் அது திருப்தி இல்லையா? எங்களை ஏன் விடுதலை செய்யக் கூடாது என்கிறார்கள்.

சாக்கடை
சிறைச்சாலையை நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு என்றுதான் நான் நினைத்தேன். உடுத்திக் கொள்ள சரியான ஆடை கூட இருக்காது, மற்ற கைதிகள் பயன்படுத்திய ஆடையை கூட நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதே வேளையில் சிறைச்சாலை என்பது ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக் கொண்டேன்.

பொது வாழ்வில்
தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். இனி பொது வாழ்வில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க போகிறேன். எங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றார் நளினி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications