அதிர வைத்த நிர்வாண பெண்.. காட்பாடி ரயில் நிலையத்தை சுற்றி வந்ததால்.. பரபரப்பு.. பெரும் சோக பின்னணி
வேலூரில் நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார் வடமாநில பெண் ஒருவர்
வேலூர்: காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண் நிர்வாணமாக நடந்து போயிருக்கிறார்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இரவு 9 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இவர் நடந்து நிர்வாணமாக நடந்து செல்வதாக சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.. அதனால், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூக பணியாளர் சங்கரி தலைமையிலான அலுவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றிருக்கிறார்கள்.

நிர்வாணமாக சுற்றி கொண்டிருந்த அந்த பெண்ணை கண்டு அதிர்ந்து, உடனடியாக டிரஸ் தந்தனர்.. அங்கிருந்த பயணி ஒருத்தரிடம் பேண்ட், சட்டையை வாங்கி அந்த பெண்ணுக்கு அணிவித்தனர்... அவர் ஒரு இளம்பெண்.. முகம் இறுகிபோய் இருந்தது.. நாகாலாந்தை சேர்ந்தவர்.. பெயர் மாமுன்.. 26 வயதாகிறது... ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் கிடையாது.
இவரை யாராவது பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், அந்த ஷாக்கில் இருந்து இவர் இன்னும் மீளவில்லை என்றும் சந்தேகிக்கப்படுகிறது.. அதேபோல, இவர் யாரையோ தீவிரமாக காதலித்து, அவரிடம் ஏமாந்து ஒரு குழந்தையும் பெற்றிருக்கிறார்.. அந்த குழந்தையை சொந்தக்காரர்கள் வளர்த்து வருகிறார்களாம்.. விரக்தி, ஏமாற்றத்தால் மாமுன் தீக்குளிக்கவும் செய்திருக்கிறார்.. அதனால் கழுத்து பகுதியில நிறைய வெந்து போய் காணப்படுகிறது.
அவரை மீட்ட அதிகாரிகள், அரியூரில் உள்ள காப்பகத்தில் மாமுனை தங்க வைத்துள்ளனர்.. பிறகு திடீரென ஒருநாள் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.. அதனால் அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து என்ன ஏதென்று டெஸ்ட் செய்திருக்கிறார்கள்... மாமுனுக்கு மூளையில் கட்டி உள்ளது தெரியவந்தது.. அதனால் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் உடனடியாக ஆபரேஷன் செய்ய முடிவானது.
ஆனால், ஆபரேஷன் செய்தால், மாமுன் உயிருக்கு ஆபத்தாக முடியுமாம்.. டாக்டர்கள் கை விரித்துவிட்டனர்.. அவரை காப்பாற்றுவதற்காக சமூக நலத்துறை அலுவலர்கள் எவ்வளவோ போராடி கொண்டுள்ளனர்.. டாக்டர்களும் முடிந்த முயற்சியை செய்துவிட்டனர்.. இன்னும் ஒரு வாரம் உயிர் தாங்குவதே பெரிசு என்றார்கள்.
ஆனால் ஒரு வாரத்தையும் தாண்டி உயிர் இழுத்து கொண்டுள்ளது.. இப்போதைக்கு அதே காப்பகத்தில் தான் மாமுன் இருக்கிறார்.. மாமுனிடம் யாராலும் எதையும் பேச முடியவில்லை.. அவருக்கு தமிழும் புரியவில்லை.. பலவீனமாக இருக்கிறார்.. மாத்திரை சாப்பிடுகிறார்.. அமைதியாக படுத்து கொள்கிறார்.. ஒவ்வொரு நிமிடமும் மாமுனுக்கு ரணமாய் கழிந்து கொண்டிருக்கிறது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications