சீமானும் பேரறிவாளனும் ஒரே கலர் டிரஸ்ஸில்.. அக்காள் மகள் கல்யாணத்தில் பறை இசைத்து மகிழ்ந்த அறிவு!
பேரறிவாளன் பறை அடித்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்
Recommended Video
வேலூர்: சீமானும், பேரறிவாளனும் ஒரே கலர் சட்டையில் கல்யாண வீட்டையே கலக்கினர்.. இதில் ஒரு படி மேலே போய் அக்கா மகள் கல்யாணத்தில் பறை அடித்து கலக்கினார் பேரறிவாளன்!
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், புழலில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் 20 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார். இவரது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. அதேபோல, அக்காள் மகள் செவ்வை-க்கு கல்யாணம்.. அதனால் பேரறிவாளன் பரோலில் கடந்த 12-ம் தேதி வந்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள தேவராசு கல்யாண மண்டபத்தில் 23-ம் தேதி திருமண ரிசப்ஷன் நடந்தது... தாய்மாமன் பேரறிவாளன் உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டார்.

அமைச்சர், சீமான்
இந்த ரிசப்ஷனுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர்கள் அமீர், கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரறிவாளன் - சீமான் சந்தோஷம்
சீமான் உள்ளே நுழைந்ததுமே பேரறிவாளன் கட்டிப்பிடித்து கொண்டார்.. பூரிப்புடன் வரவேற்றார்.. நெஞ்சில் ஒருவரையொருவர் செல்லமாக குத்தி கொண்டனர்.. இருவருமே ஒரு கலர் சட்டையை அணிந்திருந்தனர்.. மறுநாள், அதாவது நேற்று காலை கல்யாணம்.. பேரறிவாளன் திடீரென சிரித்தபடியே பறையடித்து கொண்டே மேடையேறினார்.

பறை இசைத்த பேரறிவாளன்
இதை பார்த்ததும், அற்புதம்மாளும் ஒரு பறையை வாங்கி தன் பங்குக்கு அடிக்க ஆரம்பித்தார்.. பக்கா பறையிசை கலைஞர் போலவே இருந்தது அற்புதம்மாள் பறை அடித்த விதம்! அந்த மண்டபமே பறை இசையால் அதிர்ந்தது!

பெரும் உற்சாகம்
விடுதலை உண்டா, இல்லையா என்பதே தெரியாமல், பல வருடங்கள் நான்கு சுவற்றுக்குள் தவித்த பேரறிவாளனை இப்போது பார்க்கவே வித்தியாசமாக இருந்தார்.. மண்டபத்தை சுற்றி போலீசார் நின்றிருந்தாலும், பறையடி, செல்பி என பேரறிவாளன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications