”54 வருஷமா” இந்தியாவிலேயே யாருமில்லை.. பிரதமர் மோடியே ஆச்சரியமடைந்தார்.. துரைமுருகன் சொன்ன ரகசியம்!
என் சட்டப்பேரவை அனுபவத்தை கண்டு பிரதமர் மோடி ஆச்சரியமடைந்ததாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர்: காட்பாடி தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன், 54 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் இருக்கிறேன் என்று கூறிய போது பிரதமர் நரேந்திர மோடி ஆச்சரியப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்பாடி தொகுதியை கோயிலாகவும், மக்களையும் தாயாகவும் பார்ப்பதாக கூறிய துரைமுருகன், கடந்த 2 ஆண்டுகளில் காட்பாடி தொகுதியில் தான் அதிக பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடியில் ரூ.12.94 கோடியில் தரைப்பாலம், ரூ.19.50 கோடியில் புதிய அணை பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

துரைமுருகன் பேச்சு
அதே போல் காங்கேயநல்லூர் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.100 கோடி நிதி 2 நாட்களுக்கு முன்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தேன்.

பிரதமர் மோடி ஆச்சரியம்
அப்போது நரேந்திர மோடி என்னிடம், நீங்கள் தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்வளவோ நாளாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு நான், 54 ஆண்டு என்று பதில் சொன்னேன். அதற்கு நரேந்திர மோடி, "What 54 Years" என ஆச்சரியப்பட்டார். ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் என்று கூறினேன். அதற்கு இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

அதிகப் பணிகள்
12 முறை போட்டியிட்டவர் கேரள முதலமைச்சர் உம்மண்சாண்டி. இதற்குக் காரணம் காட்பாடி தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாக பார்க்கிறேன். தமிழ்நாட்டிலேயே 2 ஆண்டுகளில் அதிகப் பணிகளை செய்தது காட்பாடி தொகுதியில் தான். தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோயில், அரிஞ்சய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

விரைவில் கும்பாபிஷேகம்
இந்த கோயிலைப் பற்றி நான் பேசி பேசி அதிகமானோர் வருகை தருகிறார்கள். இந்த கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தக் கோரிக்கை வைக்கிறார்கள். இது மாநில அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம். ஆனால் இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000
பெண்கள் எதிர்பார்க்கும் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் வரும். வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அந்த பாக்கியைக் கொடுத்துவிடுவோம். தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரும் போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications