ஜெயிலில் கம்பி எண்ணி களி திங்கும் பெண் அதிகாரி! வில்லங்கமான விஷயம்! சிக்கலில் மாஜி அதிமுக அமைச்சர்!
வேலூர்: கடன் மோசடி வழக்கில் கைதாகியுள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் உமா மகேஸ்வரியால் அதிமுக மாஜி அமைச்சர் ஒருவருக்கும் சிக்கல் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பெண் அதிகாரி இவ்வளவு துணிச்சலாக ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடி செய்திருக்கிறார் என்றால் அதன் பின்னணியில் யாரெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்ற விவரத்தை அலசி ஆராய்ந்து வருகிறது வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவின் கவனத்திற்கு இந்த விவகாரம் எப்படி வராமல் இருந்திருக்கும் என்றும் ஒரு வேளை புகார் வந்தும் அதனை அவர் கிடப்பில் போட்டாரா என்பது பற்றியும் துப்பு துலக்கி வருகிறது தனி குழு.

வேலி பயிரை மேய்ந்தது
வேலியே பயிரை மேய்ந்த கதையாக வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்த உமா மகேஸ்வரி, மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்ததாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்தது. இப்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாலும், அவருக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்தது வந்தது யார் கொடுத்த தைரியம் இதுவென்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வில்லங்கம் வரலாம்
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவுக்கு, தனது துறையில் நடைபெற்ற இவ்வளவு பெரிய மோசடி எப்படி தெரியாமல் இருந்திருக்கும் அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் விட்டாரா? அப்படியானால் அதற்கு பின்னணி காரணம் என்ன? என வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் ஜல்லடை போட்டு அலசி ஆராய்ந்து வருகிறது. மொத்தத்தில் பெண் அதிகாரி செய்த கடன் மோசடியால் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் வில்லங்கம் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புரோமோஷன் எப்படி
தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் கூட்டுறவுத்துறையில் பணிக்கு சேர்ந்த உமாமகேஸ்வரி, கருணையேயின்றி அப்பாவி கிராமப்புற பெண்கள் பெயரில் மோசடி செய்திருப்பது தான் இதில் ஹைலைட். குடியாத்தத்தில் கிளை மேலாளராக இருந்த இவருக்கு எந்த தகுதியின் அடிப்படையில் மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர் பதவி வழங்கப்பட்டது என்ற விசாரணையும் தொடங்கப்படவுள்ளது. இதனால் மாஜி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-2019
2018 -2019 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடி இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் இதைப்போல் எத்தனை மோசடிகள் வெளிவர உள்ளதோ, அத்தனை மோசடிகள் மீது கடும் ஆக்ஷன் இருக்க வேண்டும் என ஆட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நகை கடன் மோசடி விவகாரம் விஸ்பரூபமாகிய நிலையில் இப்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரூபத்தில் புது புது வில்லங்கங்கள் வரத் தொடங்கியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications