ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா! அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று!
வேலூர்: ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில், எம்எல்ஏ காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு சளி காய்ச்சல் அதிகரித்த நிலையில் அவருக்கு நடத்தப்பபட்ட பரிசோதயில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று பிற்பகலில் வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இவரும் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடன் சேர்த்து இன்று ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட செங்குட்டுவன், கார்த்திகேயன் மற்றும் காந்தியை சேர்த்து இதுவரை 16 எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அமைச்சர் கேபி அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அண்மையில் உயிரிழந்தார். இவர் தான் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்த எம்எல்ஏ ஆவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications